12 வகையான மின்சார வாகனங்களுடன் இந்திய சந்தையில் களமிறங்கும் புதிய நிறுவனம்:
Calliper Green Vehicles Limited நிறுவனம் “AGRO TECH” என்ற பெயரில் சொந்த தயாரிப்புகளாக இ-ஸ்கூட்டர்கள், இ-மோட்டார் பைக்குகள் , இ-ரிக்க்ஷாக்கள், இ-ஆட்டோக்கள், இ-லோடர்கள், இ-ஃபுட்கார்ட்கள் மற்றும் இ-குப்பை வாகனங்கள் மற்றும் மோட்டாரால் இயக்கப்படும் மிதிவண்டிகள் உள்ளிட்ட 12 வகையான மின்சார வாகனங்களுடன் இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளது.
இந்நிறுவனம் சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களை இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எலக்ரிக் வாகனங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பான மற்றும் முற்றிலும் பரிசோதனை செய்யப்பட்டுள்ள லித்தியம் பேட்டரி மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு அரசு மானியங்களை வழங்கி வருகிறது. மேலும், எலக்ரிக் பைக் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை 3 மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்நிறுவனம் இந்தியா முழுவதும் அதன் டீலர், விநியோகஸ்தர் நெட்வொர்க் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் 8 மாவட்டங்களுக்கு ஒரு உற்பத்தி மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் மின்சார வாகன சந்தையில் மற்றொரு அசைக்க முடியாத சக்தியாக இந்நிறுவனம் உருவெடுத்துள்ளது.