விலை உயரும் வீட்டு உபயோக பொருட்கள்!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாலும், அதிகரித்து வரும் உதிரிபாகங்கள் பற்றாக்குறையாலும் பொருட்களின் விலை உயர்வு மேலும் அதிகரிக்கிறது.
இந்நிலையில், வீட்டு உபயோகப் பொருள்களான டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்களின் விலையை வருகின்ற ஜூன் முதல் வாரத்தில் 3-5 சதவீதமாக உயரும் என தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.