ஏர்டெல், ஜியோ,
வோடஃபோன் &ஐடியா –
மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த முடிவு
தனக்கென தனி வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்திய அலைவரிசை நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த முடிவு.
இந்த நிறுவனங்கள் கடந்த நவம்பர் மாதம் தங்கள் ப்ரீபெய்ட்(prepaid) கட்டணத்தை 20-25 % உயர்த்தி பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன.
தற்போதும் நவம்பர் மாதத்திலிருந்து மேலும் 10-12% வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன.
“தற்போது கட்டண விலைகள் அதிகரித்திருந்தாலும் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4 கோடி புதிய பயனாளர்களை இணைத்துவிடுவார்கள்.
மேலும், 2021-நவம்பர் மாதம் 25% வரை கட்டணத்தை உயர்த்தியதில் இந்த நிறுவனங்கள் குறைந்த அளவிலான நிதி நெருக்கடியை சந்தித்தன. இதுவும் கட்டண உயர்வுக்கு வழிவகுத்துள்ளது” என அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.