மழை, புயல் காரணமாக ஆந்திரம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தில் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டது.
இதனால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. அதன் விலையும் ரூ.100 முதல் ரூ.110 ரூபாய்க்கு விற்பனையானது.
தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பால், ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.30-க்கும், பெங்களூரூ தக்காளி ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோல மற்ற காய்கறிகள் பீன்ஸ், அவரைக்காய் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.