பிசினஸ் திருச்சி தரமான பேப்பரில், ஒவ்வொரு பக்கமும் வண்ணமயமாக, ஆகச்சிறந்த பதிவுகளோடு வெளியாகிறது. தொழில் சார்ந்த தெளிவை உணர்த்துவதாக பிசினஸ் திருச்சி உள்ளது.
– ரமேஷ், உறையூர்
பிசினஸ் திருச்சியில் பிஸ்னஸ் சார்ந்து எழுதப்பட்டிருப்பது சிறப்பு, அதே சமயத்தில் சினிமா, விளையாட்டு , அரசியல், ஆன்மீகம் என்று அனைத்து துறைகள் சார்ந்து இருக்கும், பிஸ்னஸ் பற்றியும் எழுதுங்கள் என்பது என்னுடைய கருத்து. ஏனென்றால் வியாபாரம் இல்லாத எந்த ஒரு செயல்பாடுகளும் அமைவதில்லை.
சலீம், மணச்சநல்லூர்
பிசினஸ் திருச்சி, இன்றைய பிசினஸ் காலத்திற்குத் தேவையான ஒன்று. மேலும் வெற்றியாளர்கள், தொழில் சார்ந்த நேர்காணல்கள், ஆலோசனைகள், தன்னம்பிக்கை பற்றிய கட்டுரைகள், திருச்சியின் தற்போதைய தேவை என்று தொழில் சார்ந்து A to Z என வருங்காலங்களில் தொழில் சார்ந்த அனைத்தும் பிசினஸ் திருச்சியில் பதிவு செய்யப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
காயத்ரி, திருவெறும்பூர்
100 ஆண்டுகள் கடந்த என்ற கட்டுரை ஒரு தொழிலை நூறு ஆண்டுகள் கடந்து இயக்குவது எவ்வளவு சிரமம் என்பதையும் அது எவ்வளவு பெரிய சாதனை என்பதையும் எடுத்துக் கூறுவதாக இருக்கிறது.
அகஸ்டின், மணப்பாறை
தீபாவளி ஃபண்ட் வெடிக்கும் பட்டாசு என்று வெளியான கட்டுரை தற்போதைய நடப்பு நிகழ்வைக் காட்டும் கண்ணாடி போல் உள்ளது..
தாஸ், காந்தி மார்க்கெட்