தொழில் தொடங்க ஏற்ற நாள், நேரம்
(ஜூலை 1-15)
புதிய தொழில் தொடங்க நினைக்கும் நண்பர்களுக்கு, இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவாக இருக்கும். புதிய தொழில் தொடங்க நல்ல நாள் மற்றும் நல்ல நேரம்
தொழில் ஸ்தானம் என்பது ஒருவரின் ஜாதக லக்னத்திலிருந்து 10-ம் இடத்தில் அமைகின்றது. 1, 4, 7, 10 ஆகியவை கேந்திர ஸ்தானங்கள். இவற்றில் 10 என்பது உயர் கேந்திரமாகும். 10-ம் இடமும், 10-ம் வீடும் வலுப் பெற்றிருக்கும் அன்பர்கள் சொந்தத்தொழிலில் வெற்றி பெறமுடியும். அதேபோல் கோசாரப்படி குருபலம் உள்ள காலங்களில் அதாவது ராசிக்கு 2, 5, 7, 9, 11&ம் இடங்களில் குரு உலவும் போது தொழில் தொடங்குவது நல்லது. தொழில் தொடங்குபவரின் நட்சத்திரத்துக்கு, தொழில் தொடங்கும் நாளின் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9-ஆக அமைவது விசேஷமாகும்.
புதிதாக தொழில் தொடங்குபவர்கள் அமிர்தயோகம் உள்ள நாளில் தொழில் தொடங்கினால் மிகவும் சிறப்பாக அமையும். புதிய தொழில் தொடங்க சிறந்த நாட்கள் (ஜூலை 1-15)
நாள்- நேரம்
01.07.2022 5:41 AM to 10: 46 AM
06.07.2022 10:50 AM to 12:31 PM
07.07.2022 10:50 AM to 3:59 PM
10.07.2022 10:25 AM to 12:31 PM
11.07.2022 9:08 AM to 10:49 AM
14.07.2022 10:51 AM to 3:56 PM