கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் முதல் மாநில மாநாடு.. அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு..
கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் முதல் மாநில மாநாடு.. அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு..
கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் சார்பில் முதல் மாநில மாநாடு திருச்சி மன்னார்புரம் VSM மஹாலில் நாளை (10.07.2022) ஞாயிறு காலை நடைபெறுகிறது.
இது குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நலவாரிய தலைவர் பொன்குமார் கூறும் போது: கடந்த 10 ஆண்டு கால அ. தி.மு.க ஆட்சியில் 32 லட்சம் வரை உறுப்பினர்கள் இருந்து 13 லட்சம் உறுப்பினர்கள் என எண்ணிக்கை குறைந்து உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். தற்போது திமுக தலைவர் தலைமையில் ஒரு மாபெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கட்டுமானத்திற்கு தனி அமைச்சகம் வேண்டும். நிலத்தரகர்களை அமைப்பு சாரா தொழிலாளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கட்டுமான பொருட்கள் விலை நிர்ணயம் செய்ய தனி குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த மாநாட்டில் அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் செயலாளரா்கள் யுவராஜ், கண்ணன், பொருளாளர் ஜெகதீசன், மாநில இணை செயலாளர் தென்னரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.