திருச்சி வயலூர் சாலையில் மல்லியம்பத்து தயா பார்சல் சேவை திறப்பு விழா
பழனியை தலைமை இடமாக கொண்டு தயா பார்சல் சேவை நிறுவனம் இயங்கி வருகிறது. தயா டிரான்ஸ்போர்ட் மற்றும் டூரிசம் என்ற பெயரில் டாக்ஸி, பார்சல், கூரியர் சேவைகள் செய்து வரும் நிறுவனம் தற்போது திருச்சி செங்கதிர் சோலை மல்லியம்பத்தில் தங்கநகரில் புதிய கிளை திறந்துள்ளது.
கிளை நிர்வாகி கதிர்வேலன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஷினானி குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இதில் மிக குறைந்த விலையில், டிஜிட்டல் தொழில் நுட்பம் மற்றும் துரித கதியில் டெலிவரி போன்ற வசதிகள் செய்து தரப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.