Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பொங்கல் பண்டிகையையொட்டி லால்குடியில் அசத்தும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பொங்கல் பண்டிகையையொட்டி லால்குடியில் அசத்தும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

ஆதி தமிழர்கள் சமையலுக்கெனப யன்படுத்தியது மண்பாண்டங்க தான்.

மண்பாண்டத்தின் அருமை,சிறப்புகள் போன்றவை நாளா வட்டத்தில்  எடுத்துரைக்க ஆள் இல்லாமல், மக்களின் வசதிக்கும், அவசரத்திற்கும் ஏற்ப பித்தளை, செம்பு, எளிதாக சூடேற அலுமினியம், எவர்சில்வர் எனப்படும் துருப்பிடிக்காத உலோகம் பின்னர் இண்டாலியம் வகை பாத்திரங்கள், குக்கர் என மாறினாலும் பாரம்பரிய உணவு, சுகாதார உணவை தேடுவோர் மண்பானையில் சமைக்கும் உணவுகளை விரும்புவதால், மண்பானை சமையல், மண்பானை உணவகம் போன்றவை தற்போது பெருகிவருகின்றன.

மண்பாண்டங்களின் மதிப்பு உணர்ந்து பொதுமக்கள் கவனம் அதன்மேல் திரும்புவது உணர்ந்து மண்பானை தொழில் செய்துவரும் குடும்பத்தினர் தற்போது புதிய,புதிய வடிவங்களில் மண்பாண்டங்களை தயாரித்துவருகின்றனர்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

திருச்சி மாவட்டம், லால்குடியில், மாந்துறை பகுதியில் மண்பாண்டதொழிலை குலத்தொழிலாக கொண்ட சில குடும்பத்தினர் மண்ணால் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றனர். சாலையோரமாக தொடர்ச்சியாக சில கடைகளை காணும்போது அப்பொருட்களை கண்ணில் கண்டுவிட்டு கடந்துசெல்ல முடியாதபடி வாங்கியே ஆகவேண்டும் என்ற ஆவலைஅதிகப்படுத்தும் வகையில் ஒரு அலங்காரஅணிவகுப்பாக மண்சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

வழக்கமாக, அகல்விளக்கு, (கார்த்திகைதீபம்), சட்டி, பானை, உண்டியல் ஆகியவை மட்டுமே இருந்தநிலை மாறி தற்போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

ரூ.5ல் அகல்விளக்கில் தொடங்கி, பொம்மைகள், சிறுவர்களை கவர பல்வேறு வடிவங்களில் உண்டியல்கள், குழிப்பணியார சட்டி, திறந்து மூடும்வசதி கொண்ட பைப் பதிந்த மண்பானைகள், தண்ணீர்பாட்டில்கள், துளசிமாடம், மண்கடாய், வழக்கமான சட்டி, பானை வகைகள் மற்றும் திரை அலங்கார மண் உருவங்கள் என நூறுக்கும் மேற்பட்ட மண்சார்ந்த உற்பத்தி பொருட்கள் மட்டுமல்லாமல் பீங்கான் வகைகளில் கப், பிளேட், மக்போன்றவைகளும், மரகரண்டி போன்றவைகளும் ஒரேஇடத்தில் விற்கப்படுகின்றன.

மேலும், கிருஷ்ணர், ராதை போன்ற தெய்வரூபங்கள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் வகையில் பல வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.  திருச்சி மாவட்டத்தில் இதுபோன்று ஒரேஇடத்தில் அனைத்துவகை மண் தயாரிப்பு உபயோக பொருட்கள் ஒரேஇடத்தில் விற்பனை செய்யப்படுவது லால்குடி மாந்துறை பகுதியாகதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தற்போது பொங்கல் பண்டிகைக்கான பானைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டது.

மண்பாண்ட உற்பத்தி பொருட்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள் மேலும், விபரங்கள் மற்றும் விலை குறித்து கேட்டறிய பாஸ்கர் 93448 22392, ஜோதி லெட்சுமி 75300 81332 என்ற எண்களில் தொடர்பு கொண்டு வாங்கி பயனடையலாம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.