திருச்சி ஸ்பெஷல் ஆஃபர் ஏரியா
கல்லூரி இளசுகளை கவர்ந்திழுக்கும் 2 வாங்கினால் 1 இலவசம்
தள்ளுபடி விலையில் ஐஸ்கிரிம்!திருச்சி புத்தூர் அல்லித்துறை சாலையில் உள்ளது LASSI SHOP ஐஸ்கிரிம் பார்லர். முன்னதாக ஐஸ்கிரிம், குளிர்பானங்கள், பேக்கரி வகைகள், ஸ்நாக்ஸ், Sliced Brownie, Sandwich, Burger போன்ற வகைகள் விற்பனை செய்துவந்த இவர்கள் தற்போது கல்லூரி மாணவ, மாணவியர்கள் மத்தியில் ICE CREAM வகை மட்டுமே அதிகளவில் வியாபாரம்ஆவதைஉணர்ந்து தற்போது ஐஸ்கிரிம் வகைகளை மட்டுமே முன்னிறுத்தி விற்பனைசெய்து வருகின்றனர்.
தற்போது LESSI ரூ.40-க்கு விற்றதை ரூ.25 போன்று விலைக்குறைந்து தள்ளுபடி விலையில் விற்பனைசெய்து வருகின்றனர். மேலும், 20 வகையான ஐஸ்கிரிம்களுக்கும் தள்ளுபடி அறிவித்துள்ளனர். இவற்றில் Faloota வகை ஐஸ்கிரிமே விற்பனையில் முதல்இடத்தில் உள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தள்ளாடவும் ஒரு தள்ளுபடியா?
தள்ளுபடி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு வியாபார நிறுவனங்கள் அவ்வப்போது தள்ளுபடி அறிவிப்புகள் வெளியிடுவது உண்டு.
மிகப்பிரபலமானஆடித்தள்ளுபடி நீங்கலாக, அவ்வப்போது நிறுவனங்கள் அறிவிக்கும் சில தள்ளுபடிகள் வாடிக்கையார்களை பெரிதும் கவரும். ஒருபுடவைக்கு ஒரு புடவை இலவசம், 2 சட்டை வாங்கினால் 1 சட்டை இலவசம், 1 கிலோ ஸ்வீட் வாங்கினால் ஒரு கிலோ காரம் இலவசம் போன்ற அறிவிப்புகள் வழக்கமாக காண்பது தான். தற்போது மதுபிரியர்கள் எனப்படும் குடிமகன்களை கவர திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டல் அறிவித்திருக்கும் ஒரு தள்ளுபடி. அவர்களது பெர்மிட் ரூம் பாரில் 2 லா ர்ஜ் அல்லது 2 பீர்வாங்கினால் ஒரு பிரியாணி FREE என்பதுதான்.
அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் தள்ளுபடி குடிமகன்களுக்குபொருத்தாத? எனஅறிவித்திருக்கும் ஹோட்டல் நிர்வாகத் தின் முடிவு மதுபிரியர்களுக்கு ஒரு கொண்டாட் டம்தான்.