Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சிராப்பள்ளி ஷைன்சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சிராப்பள்ளி ஷைன்சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்

திருச்சிராப்பள்ளி ஷைன் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் 2022-2023ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு மற்றும் புதிய  உறுப்பினர்கள் இணைப்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி ஷைன் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணியேற்பு மற்றும் புதிய  உறுப்பினர்கள் இணைப்பு விழா நடைபெற்றது. சங்கத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய மண்டலத்தலைவருமான  MJF. Lion. Dr. அம்முட்டி பாபா தலைமையில் நடைபெற்ற இப்பணியேற்பு விழாவில் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் ஆளுநர் PMJF ஜார்ஜ் ராய் PDG பங்கேற்று 2022-2023 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக Lion அடைக்கலராஜா உள்ளிட்ட புதிய நிர்வாகிகளைப் பணியில் அமர்த்தி சிறப்புரையாற்றினார்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

முன்னாள் ஆளுநர் PMJF Lion. Dr. Lr. கார்த்திக் பாபு PDG புதிய உறுப்பினர்களைச் சங்கத்தில் இணைத்து வாழ்த்துரையாற்றினார். தம் வாழ்த்துரையில் தமது மறைவுக்குப் பிறகு தம் உடலை மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்குத் தானமாக வழங்கியுள்ள லயன் சூசைநாதபிள்ளை அவர்களை வாழ்த்தினார்.  MJF. Lion. விஜயலெட்சுமி சண்முகவேல் சேவைத் திட்டங்களைத் தொடங்கி வைத்து வாழ்த்துரையாற்றினார். மண்டலத்தலைவர்MJF. Lion Shine சிவக்குமார் வாழ்த்துரையாற்றினார்.    Lion அடைக்கலராஜா தம் ஏற்புரையில், இந்த ஆண்டு திருச்சிராப்பள்ளி ஷைன் சிட்டி லயன்ஸ் சங்கம் மற்ற சங்கங்களைவிட செயல்பாடுகளால் முன் நிற்கும். சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

திருச்சி எழுத்தாளரும், தூய வளனார் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியருமான  முனைவர் ஜோ.சலோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தம் சிறப்புரையில், மனிதர்கள் நேசிப்பதற்கானவர்கள். பொருட்கள் பயன்படுத்துவதற்கானது. ஆனால் நம் நிகழ்காலச்சூழல் மனிதர்களைப் பயன்படுத்தவும், பொருட்களை நேசிக்கவும் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. வெறும் தூரங்களை அறிவியல் சுருக்கியது போல இதயத்தையும் அது சுருக்கிவிட்டது.  இந்த பணியேற்பு விழா பாராட்டுவதற்கும், மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்குமான விழா மட்டுமல்ல.. நமக்குள் ஒரு சிறிய கீறலையாவது ஏற்படுத்த வேண்டும்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன. ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப்படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப்படுகிறது. சுயநலம் உள்ள மனிதன் புறக்கணிக்கப்படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப்படுவான்.

அறம் செய்ய விரும்பி பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதில் பலரும் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. அப்படி யாராவது சிலர் விரும்பினாலும் அந்த பணிகளெல்லாம் தேவையா?  இதை செய்ய வேண்டுமா? என்கிற வினாவை எழுப்பி செயல்படாமல் தடுப்பவர் பலர், எங்கெல்லாம் கண்ணீர் மல்கிறதோ, அங்கெல்லாம் மனித நேயத்தோடு களமிறங்கிப் பணியாற்றுகின்றனர் லயன் சங்கத்தினர். எங்களைப் போன்றோர் லயன் சங்கத்தினரைப் பாராட்டுவதற்கு அடிப்படைக் காரணம் அது ஒன்றுதான்.

ஹெலன் கெல்லர் எனும் அந்த மகத்தான மாமனிதப் பெண் இந்த பிரபஞ்சத்தில் பிறப்பெடுத்த நாளில்  புதிய இலட்சியங்களோடு, புதிய எண்ணங்களோடு, புதிய சிந்தனைகளோடு,  புதிய திட்டங்களோடு இன்று பொறுப்பெடுத்திருக்கிற புதிய நிர்வாகிகள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்ய வாழ்த்துகிறேன் என தம் சிறப்புரையை நிறைவு செய்தார். முன்னதாக நடைபெற்ற சேலம் இராஜேந்திரனின் மாயாஜால கலைநிகழ்ச்சி குழந்தைகளையும், பெரியவர்களையும் வெகுசிறப்பாகக் கவர்ந்தது.  சிறப்புரையில் புதிய தலைவர் குறித்து முனைவர் ஜோ.சலோ

புதிய தலைவர் அடைக்கலராஜா. சிறப்பு விருந்தினர் ஜோ. சலோ
புதிய தலைவர் அடைக்கலராஜா. சிறப்பு விருந்தினர் ஜோ. சலோ
  • புதிய தலைவர் அலெக்ஸ் ராஜா அவர்கள் ஏற்கனவே எண்ணற்றப் பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறபோது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
  • சூசைநாதன் அய்யா, பிலோமினாள் அம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த இவர் இறைநம்பிக்கையும் தன்னம்பிக்கையும் பெற்ற கடினமான உழைப்பாளர்,
  • தம்முடைய திறனை, திறமையை எடுத்த செயலில் நுணுக்கமாக செயல்படுத்தி தன்னை சிறந்த தொழிலதிபராக நிலை நிறுத்திக் கொண்டவர்.
  • நடிகர் அலெக்ஸ் அவர்கள் மறைந்தபோது சமூகப்பணியில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது உண்மை. வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பார் மாவோ. அந்த மாமனிதர் விட்டுச்சென்ற சமூகப்பணிகளை மனம் தளராமல், முகம் சுளிக்காமல் இன்னும் சொன்னால் தம் முகத்தை அடையாளம் காட்டாமல் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்தான் லயன் அலெக்ஸ்ராஜா.
  • ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக, ஆதரவற்றவர்களின் நலனுக்காக வேர்கள் அறக்கட்டளை என்னும் சமூக அறக்கட்டளையை நிறுவி அதன் நிறுவனத் தலைவராக மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.
  • கஜா புயல் பாதிப்பு முதற்கொண்டு கொரோனா பாதிப்பு வரை வேர்கள் அறக்கட்டளையின் செயல்பாடுகளை எளிய மக்கள் போற்றியதை பத்திரிகையாளனாக அறிந்திருக்கிறேன்.
  • கணிப்பொறிக் கல்வியை ஏழை எளிய குழந்தைகளும் கற்றுக் கொள்ள “சைபர் தமிழ் சேவை மையம்” என்ற ஒன்றை ஏற்படுத்தி அதன் வழியாக எண்ணற்ற பள்ளிக் குழந்தைகளுக்கு கணிப்பொறி கல்வியினை வழங்கிக் கொண்டிருக்கிறார;.
  • CSRI என்ற நிறுவனத்தை நிறுவி கணிப்பொறிக் கல்வியை மக்கள் மையப்படுத்தும் உயரிய பணியை மேற்கொண்டுள்ளவா;.
  • தமிழக அரசின்கீழ் செயல்படும் தமிழ் தேசியக் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா உடல் உழைப்புத் தொழிலாளர் நல வாரியத்தை சிறப்பாக ஒருங்கிணைத்து எளிய மக்களின் உள்ளத்தில் நிலைத்த இடத்தைப் பெற்றுத் திகழ்கிறார;.
  • எண்ணற்ற சமூக இயக்கங்களில் தம்மை இணைந்து முகம் காட்டாமல் எண்ணற்ற உதவிகளைச் செய்து கொணடிருக்கும் மனிதநேயப் பண்பாளர்.

எண்ணற்ற சமூகப்பணிகளை செய்து வரும் லயன் அலெக்ஸ்ராஜா தலைவராகப் பொறுப்பேற் றுள்ள இந்த லயன் சங்கம் இவ்வாண்டில் பல சேவைகளை ஆற்றி, இல்லாதோருக்கும் இயலாதோருக்கும் ஏணியாகவும், தோணியாகவும் அமைந்து, சிகர சிகர உயரத்தை அடைய வாழ்த்துகிறேன்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.