மூளைக்கும் தேவை பயிற்சிகள்
உடலுறுப்புகளில் முளை மிகவும் முக்கியமானது , உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் விழிப்புணர்வுடன் வைத்திருக்க உதவும் கணினியை விட பன்மடங்கு நினைவுத் திறனைக் கொண்டுள்ள உங்களின் மூளை ஆரோக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் பத்திக்கூர்மையுடன் நல்ல நினைவுத் இருக்க திறனுடன் முடியும் . நினைவுத்திறனை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தால் மூளைக்கு சில பயிற்சிகளை அளிக்க வேண்டியது அவசியம் ,
புதிர் போடுங்கள்
மூளைக்கு ஒரு சிறந்த பயிற்சி புதிர் விளையாட்டு. தவிர , கணிதம் தொடர்பான எந்தவொரு பயிற்சியையும் மேற்கொள்ளலாம் . அதுபோல குறுக்கெழுத்துப் போட்டி வார்த்தைகளைக் கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சிகளிலும் ஈடுபடலாம் .
புதிய சொற்களைக் கற்றல்
உங்களை புத்திசாலியாக வைத்திருக்க தினமும் புதிய சொற்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக பார்க்கும் போதும் கேட்கும்போதும் புதிய சொற்களை மனதில் நிறுத்தி அவற்றை எழுதி வைக்கவும் வேண்டும் . பின்னர் குறிப்பிட்ட நாள் கழித்து அதனை மீண்டும் நினைவுபடுத்த வேண்டும் . இதனால் உங்களுடைய மொழித்திறன் கூடுவதுடன் மூளைக்கு சிறந்த பயிற்சியாகவும் இருக்கும். அதுபோல வார்த்தைகளைக் கண்டு பிடிக்கும் விளையாட்டுகளிலும் ஈடுபடலாம் .
நடனமாடுங்கள்
நடன அசைவுகள் உடனுக்கு மட்டுமின்றி மூளையின் செயல்பாடுகளுக்கும் நல்லது . புதிய நடன அசைவுகளை உன்னிப்பாக கற்கும் போது உங்கள் மூளையின் செயலாக்க வேகத்தையும் , நினைவாற்றலையும் அதிகரிக்கும் என்பது ஆய்வுகளின் மூலமாக உறுதி செய்யப்படுள்ளது .
உணர்ச்சிகள்
உடலில் ஒவ்வொரு ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒரு செயல் , உணர்ச்சி இருக்கிறது . அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்தும்போது மூளைக்கு புத்துணர்வு கிடைக்கிறது காதுகள் மூலம் இனிமையான இசையைக் கேட்க வேண்டும் . இதுபோல ஒவ்வொரு உறுப்புகளையும் கொண்டு அனைத்து வகை உணர்ச்சிகளையும் உணர வேண்டும் .
புதியனவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள்
அன்றாட வழக்கமாக செய்யும் வேலைகளைத் தவிர்த்து புதியவற்றை கற்றுக் கொள்ள வேண்டும் . புதிய வேலைகள் நமக்கு புதியனவற்றைக் கற்றுக் கொடுக்கும் . மூளையும் புதியனவற்றை யோசிக்கும்போது அது மூளைக்கு நல்ல பயிற்சியாக அமையும் .
இசையைக் கேளுங்கள்
எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் எளிதில் கடந்துவிடும் ஆற்றல் இசைக்கு உண்டு , இசை ஒரு மனிதனை வேறொரு உலகத்துக்கு கொண்டு செல்லும் , அதன்படி , மூளையின் சிறந்த செயல்திறனுக்கான பயிற்சிகளில் இசைக்கு என்றும் இடம் இருக்கும் . மனதுக்கு இதமான சற்று அமைதியான இசையைக் கேட்பது உங்கள் மனதுக்கும் நினைவுக்கும் நல்லது .
புதிய பழக்க வழக்கங்கள்
வாழ்க்கையில் சிறுசிறு விஷயங்களை மாற்றுங்கள். உதாரணமாக தினமும் நீங்கள் பைக்கில் செல்பவராக இருந்தால் ஒரு நாள் பேருந்தில் செல்லுங்கள். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் , புதிய பழக்க வழக்கங்கள் வித்தியாசமான அனுபவங்களைத் தருகின்றன . அதுபோக அலுவலக வேலை நேரத்தை ஓரிரு நாட்கள் மாற்றலாம் , இரவு டிவி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால் ஒரு நாள் புத்தகம் படிக்கலாம் , புதிய பயிற்சிகளில் சேரலாம் . இவ்வாறாக அன்றாடச் செயல்களை அவ்வப்போது சற்று மாற்றியமைப்பது சலிப்பிலிருந்து மீள உதவும்.
யோகாசனம் அமைதி உடலுக்கும் , மனதுக்கும் பெரும் தாக்கூடியது யோகாசனம். நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் பலருக்கும் மன அமைதி தேவைப்படும் இச்சூழ்நிலையில் தினமும் ஒவ்வொரு யோகாசனங்களை செய்யுங்கள் . உடலில் பல கோளாறுகளை சரிசெய்ய வல்லது யோகாசனம். வகையான எவரொருவருக்கும் தங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்யும் போது கூடுதல் மகிழ்ச்சி உண்டாகும் . இதுவும் மூளைக்கு புத்துணர்வு அளிக்கும்.
மூளையின் செல்கள் உருப்பெறுவது மட்டுமன்றி புதிய செல்கள் உருவாகும் . உடல் இயங்க . உணவு எடுத்துக்கொள்வது போல உடல் உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்க போதிய பயிற்சிகளை அளிக்க வேண்டும் .மூளைக்கும் இது பொருந்தும்.