ஹோம் லோனில் இஎம்ஐ கட்ட லேட் ஆனால் அடுத்து நடக்கும் விபரீதங்கள்…
உரிய ஆவணங்கள் இருந்தால், வீட்டுக் கடன் வாங்குவது மிகவும் எளிது. ஆனால், சரியான முறையில், நிதி ஒழுக்கத்துடனும், சரியான திட்டமிடுதலும் கடனை அடைப்பது அவ்வளவு சுலபம் அல்ல. வீட்டுக் கடன் EMI செலுத்துவதில், ஒரு முறை தவறினால் கூட அது கடன் வாங்கியவரை பல வழிகளில் பாதிக்கலாம். வீட்டுக் கடனைத் திருப்பி செலுத்தத் தவறினால் அல்லது தாமதம் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் சரியான நேரத்தில் EMI-களை செலுத்துவதற்கான சில வழிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு உங்கள் EMI-யை நீங்கள் செலுத்தவில்லை என்றால், அது சிறிய டீபால்ட் என்று கருதப்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கடனளிப்பவர் திருப்பிச் செலுத்துவதைப் பற்றி உங்களுக்கு நினைவூட்டுவார். ஆனால் இந்த தாமதம் மீண்டும் நீடிக்கும் போது, அதாவது நீங்கள் தொடர்ந்து வீட்டுக்கடன் செலுத்த முடியாத போது பிரச்சனை மேலும் சிக்கலாகிறது. மூன்று மாதங்களுக்கு மேல் ணிவிமி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், அது பெரிய டீஃபால்ட் என்று கருதப்படும்.
கடன் அளித்த வங்கி அல்லது நிறுவனம், உங்கள் சொத்துக்களை பத்திரமாக்குதல் மற்றும் நிதிச் சொத்துகளின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு வட்டி அமலாக்கச் சட்டம் (SARFAESI), 2002ன் கீழ் ஏலம் விடுவதற்கான செயல்முறையைத் தொடங்கலாம்.
EMI செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், எந்தவொரு கடன் வழங்குநரும் வழக்கமாக எடுக்கும் முதல் படி, நிலுவையில் உள்ள EMI தொகையில் 1% முதல் 2% வரை அபராதம் விதிக்க வேண்டும். தொடர்ந்து டீஃபால்ட் செய்தவர் என்று கண்டறியப்பட்டால், அதாவது மூன்று மாதங்களுக்கும் மேலாக EMI செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், வங்கி உங்கள் கடனை NPA ஆக பதிவுசெய்து, பின்னர் மீட்பு செயல்முறையை தொடங்கலாம்.
பொதுவாக, வங்கிகள் கடனை NPA எனக் குறிக்கும் முன் அறிவிப்பை அனுப்பும். சில நேரங்களில் வங்கிகள் NPA கணக்குகளில் இருந்து பணத்தை மீட்பதற்காக முகவர்களை மூன்றாம் தரப்பினராக நியமிக்கின்றன. இது கடன் வாங்குபவர்களுக்கு அவமானமாகத் தோன்றலாம். நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழியைக் கண்டறிவது கடன் வழங்குபவர் மற்றும் கடன் வாங்குபவரின் தேவையாகும். கடன் வாங்குபவருக்கு எதிராக எந்த அச்சுறுத்தலும் அவமானமும் இருக்கக்கூடாது என்றும் சட்டம் கூறுகிறது. அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். கடன் வாங்கியவர் அதே கடனளிப்பவரிடமிருந்து வேறு ஏதேனும் கடன்களை வாங்கியிருந்தால், ணிவிமிகள் முறையாக செலுத்தப்பட்டிருந்தாலும், அதுவும் NPA கணக்குகளாக கருதப்படும்.
வீட்டுக் கடன் மாதாந்திர தவணை களை செலுத்தத் தவறுவது கிரெடிட் ஸ்கோரை மோசமாகப் பாதிக்கும். கடன் வாங்கியவர் இஎம்ஐ செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், அவரது கிரெடிட் ஸ்கோர் குறையும். இப்போதெல்லாம், பெரும்பாலான வங்கிகள் தங்கள் கடன் வட்டி விகிதங்களை சீரான இடைவெளியில் திருத்துகின்றன. வட்டி விகிதம் பொதுவாக ரெப்போ ரேட் மற்றும் கடன் வாங்குபவரின் கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் கணக்கிடப்படும் மற்றும் ரிஸ்க் பிரீமியத்தின் அடிப்படையில் திருத்தப்படும். எனவே, குறைந்த கிரெடிட் ஸ்கோர் வட்டி விகிதத்தை கடன் வழங்குனர் அதிகரிக்கலாம். இது கடன் வாங்குபவரின் கடன் அறிக்கையிலும் பிரதிபலிக்கும். எதிர்காலத்தில் கடன் வாங்குபவர், வேறு கடன் பெறுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.
உங்கள் வீட்டுக் கடனை வேறு ஏதேனும் வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு மாற்ற விரும்பினால், EMI செலுத்துவதில் உள்ள தவறு காரணமாக, புதிய கடன் வழங்குபவர் உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம். தனிநபர் கடன்கள், கார் கடன்கள் போன்ற பிற கடன்களும் பெறுவதற்கு கடினமாக இருக்கலாம்.
உங்கள் நிதிநிலை பாதிப்பு தற்காலிகமானதாக இருந்தால், EMI-களை திருப்பிச் செலுத்த நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கடன் வாங்கலாம். இஎம்ஐ செலுத்த உங்கள் நிலையான வைப்பு அல்லது ஆயுள் காப்பீடுகளில் இருந்து ஓவர் டிராஃப்ட்களை எடுத்து கடன் தொகை செலுத்தலாம். ஆனால் இந்த பணம் மீண்டும் ஓவர் டிராஃப்ட்டில் டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால் நீங்கள் காலவரையற்ற நிதி நெருக்கடியை எதிர்கொண்டால், நீங்கள் EMI களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த நிலையான வைப்பு அல்லது பிற திரவ நிதிகளில் இருந்து பணத்தை எடுக்கலாம். உங்கள் றிதி பங்களிப்பு அல்லது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) போன்ற நீண்ட கால முதலீடுகளில் இருந்து பணத்தை வித்டிரா செய்வதையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.
நிதி நிலைமை விரைவில் முன்னேற வாய்ப்பில்லை எனில், வீட்டை விற்கலாம். ஒரு சிறிய வீடு அல்லது வாடகை வீட்டிற்கு மாறுவது போன்ற விருப்பங்களும் உள்ளன அல்லது தங்கம், கார் போன்ற சொத்துக்களை விற்கலாம்.
குறுகிய காலத்திற்கு EMI-களை ஈடுசெய்ய கடன் காப்பீட்டுத் திட்டத்தை வாங்கலாம். சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் நேரத்தில் இத்தகைய காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகின்றன. வேலை இழப்பு அல்லது வருமானம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட காரணமாக உங்கள் EMI-களை உங்களால் செலுத்த முடியாமல் போகும் போது இதுபோன்ற காப்பீடுகள் பயனுள்ளதாக இருக்கும்.
பாதகமான நிதி சூழ்நிலைகளில் சரியான நேரத்தில் EMI-களை செலுத்த உங்களிடம் போதுமான பணம் இருப்பதை உறுதிசெய்ய அவசர சேமிப்பு மற்றும் முதலீட்டை உருவாக்கவும். கடன் வாங்கும் முன் இதுபோன்ற விஷயங்களைத் திட்டமிடுவது நல்லது. நீங்கள் திருப்பிச் செலுத்தக்கூடிய அளவுக்கு மட்டுமே கடனை வாங்குங்கள்.
கடன் வழங்குனரிடம் பேசி தீர்வு காணலாம். கடன் மறுசீரமைப்பு, சலுகை, தடை காலம் மற்றும் கடன் தீர்வு போன்ற விருப்பங்களை அவர்கள் பரிசீலனை செய்யலாம்.