உங்கள் முதலீட்டை அதிகரிக்க…
நிகர சொத்து மதிப்பைக் கணக்கிடுங்கள்…உங்களின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு என்பதைப் பட்டியலிடுங்கள். சொத்து என்கிற போது வீடு, மனை, தங்கம், வெள்ளி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, பங்குச் சந்தை முதலீடு எல்லாம் சேர்ந்தது. இவற்றின் மதிப்பிலிருந்து நீங்கள் பிறருக்குக் கொடுக்க வேண்டிய கடன்களைக் கழியுங்கள். இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், இங்கிருந்து எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பது புரியும்.
இந்தச் சொத்துகளின் நிகர மதிப்பு மூன்று மாதத்துக்கு முன் என்னவாக இருந்தது. இப்போது அதிகரித்திருக்கிறதா, குறைந்திருக்கிறதா என மதிப்பிடுங்கள். உங்கள் நிகர சொத்து மதிப்பு மிகக் குறைவாகக்கூட இருக்கலாம். ஆனால், இதை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் சரியான முதலீட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு உங்கள் பணத்தை பல மடங்காக அதிகரிக்க முடியும்.
மேலும், உங்களுக்கு திடீரென அலுவலகத்தில் ரூ.1 லட்சம் கிடைக்கிறது. அதை எதில் முதலீடு செய்வது என்கிற தெளிவு இருக்க வேண்டும். இல்லை எனில், காற்றில் கற்பூரம் கரைவதுபோல் உங்கள் காசு கரைந்துவிடும்!