இந்த நிதிச் சவாலுக்கு நீங்க தயாரா! ஒரு வாரம் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தக் கூடாது!
நாம் அனைவரும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி சிறிய மற்றும் பெரிய பொருள்களை வாங்க நிறைய செலவு செய்கிறோம். கிரெடிட் கார்டுகள் தேவையில்லாத பொருள்களை வாங்கவும், நம்மை அதிகமாகச் செலவு செய்யவும் வைக்கிறது. அதாவது, கையில் பணம் இல்லை என்றாலும் பொருள்களை வாங்கும் வசதி மற்றும் சுமார் 45 – 50 நாள்களுக்கு வட்டியில்லாக் கடன் சலுகையால் பலரும் கிரெடிட் கார்டு மூலம் அதிகம் பயன்படாத பொருள் களைக் கூட வாங்கிவிடுகிறார்கள்.
ரொக்கப் பணம் கொடுத்து பொருள்களை வாங்கும்போது மிக அவசியம் எனக் கருதும் பொருள்களுக்கு மட்டுமே செலவு செய்கிறோம். பல சமயங் களில் பொருள்களை வாங்கு வதைத் தள்ளிப்போடுவோம்.
கிரெடிட் கார்டைப் பயன் படுத்தாத ஒரு வாரக் காலத்தில், உங்களின் தேவையில்லாத பல செலவுகளைத் தவிர்க்க முடியும். நீங்கள் எந்தெந்த பொருள்களை மற்றவர்களின் தூண்டுதலால் வாங்குகிறீர்கள், எந்தெந்தப் பொருள்களைத் தேவையின் அடிப்படையில் வாங்குகிறீர்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
இந்தச் சுயக்கட்டுப்பாடு, கண்டபடி செலவு செய்யும் நுகர்வோர் குணத்துக்கு எதிராக உங்களை உளவியல் ரீதியாகத் தயார்ப்படுத்தவும், அதிகமாகச் சேமிக்கவும் உதவும். இந்தச் செலவுச் சவால் களை நீங்கள் எதிர்கொள்ளத் தொடங்கியவுடன் நீங்கள் நிறைய கற்றுக்கொள்வீர்கள்.
நிதி திட்டமிடல் செயல்பாட்டில், குறைவாகச் செலவழிப் பதும், அதிகமாகச் சேமிப்பதும் முதல் படியாகும். அதற்கு இந்த நிதிச் சவால் உங்களுக்கு உதவும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!