Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஆசைய தூண்டினாங்க… பணத்தை இழந்தேங்க…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ஆசைய தூண்டினாங்க… பணத்தை இழந்தேங்க…

ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், அவரது ஆசையை தூண்ட வேண்டும் “ – இது ‘ சதுரங்க வேட்டை ‘ திரைப்படத்தில் வரும் வசனம் . இவ்வாறு , மக்களின் ஆசையை தூண்டி வெவ்வேறு வித மான மோசடிகள் தினமும் நடந்து வருகின்றன . இந்த மோசடி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருப்பது கடன் தருவதாக , செல்போன் செயலி மூலம் பணம் பறித்தல் .

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியது : பொதுமக்களை போனில் தொடர்பு கொள்ளும் நபர்கள் , குறைந்த வட்டியில் கடன்தருவதாக ஆசைவார்த்தை கூறுவார்கள் . எஸ்எம்எஸ் மூலம் கோரிக்கை விடுப்பார்கள் . தங்களது கடன் செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டால் , தேவைப்படும்போது கடன் வாங்கிக் கொள்ளலாம் என்பார்கள்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

இதனால் ஈர்க்கப்படுவோர் கடன் செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வார்கள் . அதோடு , தங்கள் போனில் இருக்கும் தொடர்பு எண்கள், கேலரி, லொக்கேஷன் உட்பட அனைத்து விவரங்களையும் பயன்படுத்திக்கொள்ள , சம்பந்தப்பட்ட கடன் செயலிக்கு அனுமதியும் கொடுத்து விடுவார்கள்‌.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

கடன் செயலியில் கேட்டபடி , செல்ஃபி’யை பதிவிடுவார்கள். மோசடி நபர்கள் அதுவரை , ‘ ரூ .1 லட்சம் கடன் பெறலாம் ‘ என்று கூறுவார்கள் . ஆனால் , வாடிக்கையாளர்கள் தங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் செயலியில் பதிவிட்ட பிறகு, ரூ .2 ஆயிரம் முதல் ரூ .7 ஆயிரத்துக்கு மேல் பெற முடியாது என நிபந்தனை விதிப்பார்கள் . 90 நாட்கள் வரை வட்டி செலுத்த வேண்டாம் என அவர்கள் கூறியதை நம்பி , தோராயமாக ரூ .5 ஆயிரம் கடன் பெற்றால் , நமது வங்கி கணக்குக்கு 60 சதவீத பணம் மட்டுமே வந்து சேரும் . எஞ்சிய தொகையை வட்டியாக முதலிலேயே எடுத்துக் கொள்வார்கள் .

அடுத்த 3 நாட்கள் முதல் , அவர்கள் கொடுத்த கடன் தொகை மட்டுமின்றி , கூடுதலாகவும் கேட்டு மிரட்டுவார்கள் . கொடுக்காவிட்டால், ஆபாசமாக திட்டுவார்கள். நமது கேலரியில் இருந்து அவர்கள் ஏற்கெனவே எடுத்த புகைப்படங்களை மார்ஃபிங் செய்து கடன் பெற்றவர்கள் , அவரது குடும்பத்தினர் , உறவினர் களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புவார்கள்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.