10 ரூபாய் காயின் வாங்க மறுத்தால் ஜெயில்!
10 ரூபாய் நாணயங்களை மக்கள் வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. குறிப்பாக அரசு பேருந்து, வங்கிகள், கடைகள் என எங்கும் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்து வருகின்றனர். இது குறித்து, ரிசர்வ் வங்கியின் சார்பில் இப்போது விளக்கம் தரப்பட்டுள்ளது.
10 ரூபாய் நாணயங்களை அரசுப் பேருந்துகளிலோ, கடைகளிலோ வாங்க மறுத்தால் அவர்களுக்கு எதிராகப் புகார் அளிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாணயங்களைப் பாதுகாத்தல் மற்றும் அழிப்பதைத் தடைசெய்வதற்கும் உள்ள Coinage Act 2011 சட்டப்படி இந்திய அரசாங்கத்தினால் வெளிடப்படும் நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என கூறப்படுகிறது.
அரசாங்க விதிகளை மீறியதற்காக Indian Penal Code 188-யில் கீழ் ஒரு மாத கால சிறை தண்டணை அல்லது ரூ.200 அபராதம் விதிக்கலாம். 124 A என்னும் சட்டப்பிரிவின் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யவும் மேலும், அதிகப்பட்சமாக ஆயுள் வழங்கவும் வாய்ப்புள்ளதாக சட்டம் சொல்கிறது.