குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோரால் இந்திய பொருளாதாரத்திற்கு புதிய பாதை
தஞ்சாவூர் அருகே வல்லத்தில் தேசிய எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பானு பிரதாப்சிங் வர்மா கலந்து கொண்டு பேசியது:
குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோரால் இந்திய பொருளாதாரத்திற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. வலுவான மற்றும் தன்னிறைவு கொண்ட இந்தியாவை உருவாக்குவ தில் 6 கோடிக்கும் அதிக மான குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 30சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான நிறுவனப் பதிவு போர்ட்டலில் 11.46 லட்சம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க பதிவு செய்துள்ளனர்.