விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்க நடவடிக்கை
வேளாண்மைத் துறையின் செயல் பாடுகளை ஊக்குவிக் கவும், பணிகளை துரிதப்படுத்தவும் அரசு புதிதாக அதிகாரிகளை பணியமர்த்தியுள்ளது.
விவசாயிகள் வளர்ச்சி எனும் ஒரே நோக்கத்தில் துறை அலுவலர்கள் அனைவரும் முழு மூச்சு டன் பணியாற்ற வேண்டும். தொழில்நுட்பங்களின் மூலம் குறைந்த பரப்பில் அதிக மகசூல் எடுப்பதற்கான அம்சங்களை விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். ஊட்டச் சத்து பரப்பினை உறுதி செய்யும் பழங்கள், காய்கறிகள் உற்பத்தியை உயர்த்தவும், தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரே பயிரை அல்லது ஒரே ரகத்தை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, பலவகைப் பயிர்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு செயற்கை நுண்ணறிவு போன்ற கணினித் – தொழில் நுட்பங்கள் மூலம் தீர்வு காண வேண்டும்.
விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்திட நட வடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பேசினார்.