ஜப்பானோடு போட்டி போடும் ஹைட்ரஜன் ரயில் இந்தியாவில் அறிமுகமாகுது
அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயக்கப்படும் ரயில் சேவை முதன்முதலாக அறிமுகப் படுத்தப்படவுள்ளது . இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது :
உலக அளவில் ரயில்களை கட்டமைப்பதில் இந்தியா சிறந்து விளங்குகிறது . ரயில் தயாரிப்பில் அடுத்த பெரிய நி கழ்வாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் வரும் சுதந்திர நாளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .
ஹைட்ரஜன் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத வாயு என்பது நினைவுகூரத்தக்கது . சென்னை ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் உலகின் தலைசிறந்த 5 ரயில்களுள் ஒன்றாக சமீபத்தில் கண்டறியப்பட்டது .
மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில் சிறிய குலுங்கல் கூட இல்லாமல் மிக சொகுசாக பயணிக்க ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டது .
ஜப்பானின் புல்லட் ரயில் 100 கி.மீ. வேகத்தை 55 நொடிகளில் எட்டும் நிலையில், வந்தே பாரத் வெறும் 52 நொடிகளில் அந்த வேகத்தை எட்டிவிடும் என கூறினார் .