பதில் சொல்லுங்க… இல்ல அபராதம் கட்டுங்க…
ஆன்லைன் பணபரிமாற்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது நுழைந்திருக்க, கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த கூகுள் சேவையை விசாரிக்க தொடங்கியிருக்கிறது.
காம்பெடிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா. பணபரிமாற்றம் செய்யும் பிறர் ஆன்லைன் நிறுவனங்களின் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கூகுள் மீது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கம்பெடிசன் கமிஷன் ஆஃப் இந்தியாவின் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லவில்லை என்றால் அபராதம் கட்ட வேண்டி இருக்கலாம் என்கிறார்கள்.