இளைஞர்களுக்காக… அனைவரையும் ஈர்க்க வேண்டுமா.?
ஆடை, அலங்காரம், நடை உடை பாவனை, என்று தன்னை அனைவரையும் ஈர்க்கும் போது வெளிப்படுத்திக்கொள்ள கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஒரு கூட்டத்தில் நீங்கள் தனியாக அனைவரின் கவனத்தை ஈர்க்கும்படி தெரிய வேண்டுமென்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. தோற்றம் என்பதைக் கடந்து, ஆண்களுக்கே உரிய சில குணங்களும் பண்புகளும் அவர்களை தனித்துவமாகக் காட்டும். பெண்களை மட்டும் ஈர்க்கும் வகையில் இல்லாமல், எந்த இடத்திலும், நீங்கள் எளிதாக தெரியும்படி, ஒரு அட்ராக்டிவ் நபராக இருப்பது எப்படி என்று இங்கே பாருங்கள்.
உடலும் தோற்றமும் : உங்கள் குணமும், திறன்களும் கண்களுக்குத் தெரியாதே! எனவே, முதல் ஈர்ப்புக்கு உங்கள் தோற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியம். அடுத்தது, உங்களுக்கு பொருந்தும் ஆடைகளை அணிவது. ஆடைகளை மிகவும் நேர்த்தியாகவும் ஸ்டைலாகவும் அணிவது, முதல் பார்வையிலேயே அட்ராக்ட் செய்ய வைக்கும்.
பெண்களைப் போலவே ஆண்களும் தங்களை க்ரூம் செய்து கொள்ள வேண்டும். எந்த நிறத்தில் ஆடை அணிவது என்பது முதல், பெர்சனல் கேர், ஹேர் ஸ்டைல், தாடி உள்ளிட்ட எல்லாவற்றையும் நேர்த்தியாக பராமரிக்க வேண்டும். ஏனோ தானோ என்று இருக்கும் ஆண்கள், கட்டாயம் ‘ஈர்க்கக் கூடிய’ பட்டியலில் இடம் பெற மாட்டார்கள்.
புத்திசாலித்தனமான உரையாடல் : பெண்களுக்கு சிரிக்க வைக்கும் ஆண்களை எவ்வளவு பிடிக்குமோ, அதே அளவுக்கு புத்திசாலியான ஆண்களிடம் ஈர்க்கப்படுவார்கள். மிகவும் கடினமான விஷயங்களில், உங்கள் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் உரையாடல்களில் ஈடுபடும் போது, சந்தேகமே இல்லாமல் பெண்களை மட்டுமில்லாமல் அனைவரையுமே ஈர்ப்பீர்கள்.
நம்பிக்கையுடன் இருப்பது : தன்னம்பிக்கையுடன் இருப்பவர்கள் அனைவரையும் எளிதில் ஈர்க்க முடியும். உளவியல்பூர்வமாக, தன்னம்பிக்கை என்பது அதிகாரம், ஆற்றல் மற்றும் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஆகியவற்றைக் குறிக்கும்., சின்ன சின்ன விஷயங்களுக்கு சோர்ந்து போகாமல், புலம்பாமல், முயற்சியில் பின்வாங்காமல் தன்னம்பிக்கையுடன் செயல்படும் ஆண்கள் எல்லா விதத்திலும் அட்ராக்ட் செய்வார்கள்.
வாழ்க்கையில் குறிக்கோள் மீதான ஆர்வம் : ஆண் பெண் என்ற வேறுபாடின்றி எல்லாருக்குமே வாழ்க்கையில் குறிக்கோள் இருக்க வேண்டும். இது இரு பாலருக்கும் பொருந்தும் என்றாலும், குறிக்கோள் இருக்கும் ஆண்களை, அதை நோக்கி பயணிக்கும், தன்னுடைய கனவுகளை அடையத் துடிக்கும் ஆண்களை அனைவருமே பிரமிப்பாக பார்ப்பார்கள். படிப்பு, பிடித்த வேலை, கிடைத்த வேலை, வீடு, கனவுகள் என்பதற்கு மத்தியில் தன்னுடைய குறிக்கோளை அடைய முயற்சிப்பது, அனைவரையும் ஊக்கப்படுத்தும்.
உதவி செய்யும் ஆண்கள் : நீங்கள் எப்படி இருந்தாலும் சரி, என்ன வேலை செய்தாலும் சரி, தோற்றம் பற்றி மேலே கூறியுள்ளது போல பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்றாலும் சரி, யாருக்காவது உதவி என்று வரும் போது, முன்னே நின்றாலே மற்றவர்கள் மீது ஸ்பெஷல் கவனம் செலுத்துவார்கள். உதவி என்று நிற்பவர்களுக்கு மிகவும் அட்ராக்டிவ்வான நபர்கள். மற்றவர்களுக்கு உதவும் குணமே ஈர்க்கக்கூடிய குணமாகும்.