புதிய தொழில்முனைவோருக்கான கேள்வி – பதில் பகுதி
மகளிர் தொழில் முனைவோருக்கான சலுகைகள் என்னென்ன?
தொழிற்கடன் பெறுவதற்கான வயது உச்சவரம்பில் சலுகை உண்டு. கிராமப்புற தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பீட்டில் சொந்த முதலீட்டு வரம்பில் சலுகை உண்டு. பெறக்கூடிய தொழிற்கடனுக்கான மானியத்தில் சலுகை உண்டு.
MSME-யின் கடன் திட்டங்கள் மூலம் விண்ணப்பிக்கும்போது தொழிற்பயிற்சி பெற வேண்டும் என்ற வழிமுறைகள் உண்டா?
ஆம். தொழிற் சார்ந்த பயிற்சிகள் உண்டு.. தொழிற் நிறுவனங்களை
கையாளும் முறை, நிறுவன நிர்வாக வரன்முறைகள்,ஆவணங்களை உருவாக்கும் முறை, கையாள்வது மற்றும் நிறுவன வர்த்தக கணக்குபதிவுகள், சட்டபூர்வமான பதிவுகள், நிர்வாக கோப்புகளை பராமரிக்கு முறை, ஊழியர்களிடம் நடந்து கொள்ளும் முறை, வர்த்தக தொடர்புக்காக வாடிக்கையாளர்களை கையாளும் முறை போன்ற பயிற்சிகளை தக்க வல்லுநர்கள் மூலம் இணைய வழி மூலம் குறிப்பிட்ட நாட்களுக்கு நடத்தப்படும். இதில் அவசியம் கலந்துகொண்ட பின் பெறப்படும் சான்றிதழ்களின்படி கடனுக்கான மானிய உதவிகள் கிடைக்கும்.
தொழிற்கடன் பெற விண்ணப்பிப்பதற்கு முன் தேர்ந்தெடுக்கப்படும் தொழில் பற்றிய விளக்கங்களை எங்கே பெறலாம்?
தொழில் பற்றிய விளக்க அறிக்கையுடன் திருச்சிராப்பள்ளி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கத்தின் அலுவலகம் அரியமங்கலம் சிட்கோ வளாகத்தில் உள்ளது. அவர்களை அணுகி விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.
சொத்து பிணையமில்லா கடன் வசதி பெற எப்படி விண்ணப்பிப்பது?
பிணையமில்லா கடன் வசதி பெற சில வழிமுறைகள் உள்ளன. திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை அணுகி முழு விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் சந்தேகங்களுக்கு -தொடர்பு கொள்ளவும்
தொழில் ஆலோசகர் இரா.சண்முகம் 9791 949 333