நமக்கே தெரியாமல் நம் பணத்தை எடுக்கும் பிரபல நிறுவனம்
இப்ப எல்லா கார்ப்பரேட் நிறுவனமும் என்ன நினைக்குதுண்ணா, ஒரு தனி மனிதனின் பாக்கெட்டில் இருந்து, அவனுக்கு தெரியாமலேயே அவன் பணத்தை எப்படி லாவகமாக சுடுவது என்று தான். இதுக்காகவே.. ரூம் போட்டு யோசிப்பாங்க போல.. இதகேளுங்களே… நமக்கு ஒரு பொருள் வேணும்முன்னா வெப்சைட்டில் போய் ஆர்டர் செய்வோம். அந்த ஆர்டர் நம்ம வீடு தேடி வந்துரும்.
இந்த ஆர்டர் எடுக்குற நிறுவனமாக அமேசான், பிளிப்காட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றது. சில நேரங்களில் நாம் ஆர்டர் செய்த பொருள் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு பொருள் வந்து நம்மை சங்கடத்திற்குள்ளாக்கிவிடும்.
இந்த சங்கடத்தை தவிர்ப்பதற்காக பிளிப்காட் நிறுவனம் ஒரு புதிய யுக்தியை கடைபிடிக்கிறது. அதாவது ஓபன் பாக்ஸ் டெலிவரி செக்யூரு பேக்கேஜ் என்பது தான் அது. இது நல்ல விஷயம் தானே. பொருள் கொண்டு வந்து கொடுத்தால், அந்த பொருளை பிரித்து பார்த்து நாம் ஆர்டர் செய்த பொருள் தான் என்று முடிவு செய்து பணம் கட்டி விட்டு நிம்மதியாக இருக்கலாமே என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா?
ஆமாம் இது நல்ல விஷயம் தான். நாம் வெப்சைட்டில் தேடிய பொருள், நமது கைக்கு வந்து விட்டது என்பதில் மகிழ்ச்சி தான். ஆனால் பிளிப்காட் நிறுவனம் இங்கே தான் ஒரு ட்விட்டை வைத்துள்ளது. ஆம். சிங்கிள் பொருளை பிரித்து பார்க்க அவர்கள் ரூ.29 சார்ஜ் செய்கிறார்கள்.
இது சரியா தப்பா என்பதை வாடிக்கையாளர்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் அமேசான் போன்ற நிறுவனங்கள் பிரித்து பார்ப்பதற்கு வேறு எந்த காசும் வாங்குவதில்லை என்பதும் உண்மை. ஒரு நாளைக்கு ஒரு பார்சலுக்கு ரூ.29 என்றால் தினமும் பிளிப்காட் நிறுவனம் 1 லட்சம் பார்ச்சல் அனுப்பினால் அவர்கள் வாங்கும் ரூபாயின் மதிப்பு ரூ.29 லட்சம்.
இப்ப புரிகிறதா சகோ… உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் பணத்தை எப்பட ஆட்டைய போடுறாங்க இந்த கார்ப்பரேட் நிறுவனம்.