புதிய தொழில்முனைவோருக்கான கேள்வி-பதில் பகுதி
இ-வே பில் என்றால் என்ன?
விற்பனை செய்யும் பொருட்களை வாகனங்களில் அனுப்பும்போது ஜிஎஸ்டி விதி எண்.68ன் படி பொருளின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் அதன் விவரங்கள் அடங்கிய ஆவணம் வாகனத்தில் இருக்க வேண்டும். அந்த பதிவு பெற்ற ஆவணம் தான் இ-வே பில்.
இ-வே பில் தயாரிப்பில் பிழையென்றால்…?
பிழை ஏற்பட்டால் அதை திருத்தவோ, மாற்றம் செய்யவோ இயலாது.
இ-வே பில்க்கு கால நிர்ணயம் உண்டா?
பொருட்கள் அனுப்பப்படும் தூரம் 1 நாளைக்கு 100 கிமீ ஆகும்.
யாருக்கெல்லாம் இ-வே பில் அவசியமாகிறது?
ஒவ்வொரு பதிவு பெற்ற நபரும், நிறுவனங்களும் கண்டிப்பாக பொருட்களை அனுப்புவதற்கு இ&வே பில் கையாள வேண்டும். அல்லது அந்த வாகனங்கள் பதிவு பெற்றிருக்க வேண்டும்.
பொருட்களை வாகனங்களில் அனுப்பும்போது என்னென்ன ஆவணங்கள் தேவை?
அனுப்பப்படும் பொருளுக் குண்டான வரியை குறிப்பிட்டிருக்கும் பில், அவற்றை வாகனத்தில் அனுப்புவதற்கான டெலிவரி சலான், பொருளை அனுப்புவதற்கான இவே பில் நகல் அல்லது குறிப்பிடப்பட வேண்டிய இவே பில் எண் போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும்.
ஜிஎஸ்டி சம்பந்தப்பட்ட ஆவணங்களை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு பயிற்சிகள் உண்டா?
இதற்கு பயிற்சி வகுப்புகள் கிடையாது. ஜிஎஸ்டி சம்பந்தப்பட்ட அலுவல்களை மேற்கொள்ளும் நிறுவனப் பணியாளர்களை அருகில் உள்ள ஜிஎஸ்டி அரசு அலுவலகங்களை அணுகி அங்குள்ள சிறப்பு சேவை மையத்தில் வேண்டிய விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம்.
முன்னுரிமை வழங்கி அரசு அதிகாரிகள் விளக்கம் அளிக்க தயாராக உள்ளார்கள்.