மாதம் ரூ.60,000 வருமானம் பெற வேண்டுமா?
இன்று பலரும் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் என்ன தொழில் செய்வது அதற்கு எவ்வளவு முதலீடு ஒதுக்குவது அல்லது ஏற்பாடு செய்வது என்பதில் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது. முதல் முதலாக தொழில் செய்ய விரும்புவோர் சிறிய முதலீட்டில் தொழிலை துவக்குவதே சிறந்த வழி என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறிய முதலீட்டில் என்ன தொழில் செய்வது என்று உங்களுக்கு குழப்பம் இருக்கிறதா.! நல்ல லாபகரமான தொழிலைத் தொடங்க விரும்புகிறீர்களா? குறைந்த முதலீட்டில் நீங்கள் ஒரு புதிய தொழிலை தொடங்க நினைத்தால் சிப்ஸ் தொழில் உங்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கலாம். உருளைக்கிழங்கு சிப்ஸை விட தற்போது வாழைப்பழ சிப்ஸ்களுக்கு தேவை அதிகரித்து இருக்கிறது. ஏனென்றால் வாழைப்பழ சிப்ஸ் ஆரோக்கியமான தேர்வாக இருந்து வருகிறது.
மிக குறைந்த முதலீட்டில் நடத்த முடியும் என்பதால் வாழைப்பழ சிப்ஸ் தயாரிப்பு தொழில் சுவாரஸ்யமான தேர்வாகவும் இருக்கும். தற்போது மார்க்கெட்டில் வாழைப்பழ சிப்ஸிக்கு அதிக கிராக்கி நிலவும் நிலையில் இந்த சிப்ஸ்களை லோக்கல் மார்க்கெட்டில் விற்பது எளிது. குறிப்பாக நகர்ப்புறங்களில் இதன் தேவை அதிகரித்து வருகிறது.
சிறிய நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகள் வாழைப்பழ சிப்ஸிற்கான வளர்ந்து வரும் சந்தையாக இருந்து வருகின்றன. காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தொழிலை எப்படி தொடங்குவது, இதற்காகும் செலவு, லாபம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், பீகார் மற்றும் கர்நாடகா ஆகியவை வாழைப்பழம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும். வாழைப்பழம் விளையும் பகுதிகளில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், நிச்சயமாக இந்த தொழிலை முயற்சிக்கலாம்!
எவ்வளவு முதலீடு தேவைப்படும்:
வாழைப்பழ சிப்ஸ் தயாரிக்கும் தொழிலை தொடங்க ஒருவர் சுமார் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். அதாவது ரூ.5 லட்சத்தில் நீங்கள் வாழைப்பழ சிப்ஸ் தயாரிப்பு தொழிலை தொடங்கலாம். இதில் ஒர்க் டெவலப்மென்ட்டிற்காக ரூ.2.5 லட்சமும், சிப்ஸ் தயாரிக்கும் உபகரணங்கள் வாங்கு ரூ.1.55 லட்சமும், ஒர்கிங் கேப்பிட்டல் என்ற வகையில் ரூ.50 ஆயிரமும் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
எவ்வளவு சம்பாதிக்க முடியும்?
இந்த தொழிலில் நீங்கள் ஒரு வருடத்தில் 24 டன் வாழைப்பழ சிப்ஸ் வரை தயாரிக்க முடியும் என்று ரிக்ஷிமிசி அறிக்கை கூறுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.9,88,700 ஆகும். 100% உற்பத்தித் திறனை பயன்படுத்தி ரூ.18,00,000 விற்பனை இலக்கை எட்டலாம். அறிக்கையின்படி அனைத்து செலவுகளையும் கழித்த பின் ஆண்டு வருமானம் ரூ.7,83,000 ஆக இருக்கும். அதாவது மாத வருமானம் ரூ.65,000-க்கு மேல் இருக்கும்.
முதலீடு செய்ய பணம் இல்லையா.!
இந்த பிசினஸ் ஐடியா நன்றாக இருக்கிறது, ஆனால் சுமார் ரூ.5 லட்சத்திற்கு எங்கே போவது என்ற கவலை உங்களுக்கு இருக்கிறதா? இந்த தொழிலில் முதலீடு செய்ய உங்களிடம் போதுமான மூலதனம் இல்லை என்றால் நீங்கள் PM Mudra Yojana திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் கார்ப்பரேட் அல்லாத சிறுதொழில்களை தொடங்க அல்லது விரிவுபடுத்த ரூ10 லட்சம் வரை கடன் பெறலாம்.