Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சேவை தொழிலுக்கு ரூ.25 லட்சம் வரை கடனுதவி

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சேவை தொழிலுக்கு ரூ.25 லட்சம் வரை கடனுதவி

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டம் தரும் கடனுதவி திட்டங்களில் சேவை சார்ந்த தொழில்கள் (PMEGP) உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்ச ரூபாய் வரையிலும் சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலும் திட்டத்தின் அளவு அனுமதிக்கப்படும். 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். உச்சபட்ச வயது வரம்பு இல்லை.

3

ரூ.5 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு சொத்து பிணையம் தேவையில்லை. உற்பத்தி சார்ந்த தொழிலில் ரூ.10 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவை சார்ந்த தொழிலில் ரூ.5 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட திட்டங்களுக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். திட்ட மதிப்பீட்டில் ரூ.1 லட்சத்திற்கு குறைந்த பட்சம் ஒருவர் என்ற வீதத்தில் மொத்த திட்ட முதலீட்டிற்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பளித்தல் கட்டாயமாகும். கூடுதலாக வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வங்கிகள் பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் அளவிலும், நலிவடைந்த பிரிவினருக்கு 95 சதவீதம் அளவிலும் கடன் ஒப்பளிப்பு செய்து, இரண்டு வார தொழில் முனைவோர் பயிற்சி முடித்தவருக்கு பணம் பட்டுவாடா செய்யும். பயிற்சி இன்றி வங்கிகள் பணம் பட்டுவாடா செய்யும் பட்சத்தில் மானியம் பெற இயலாது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.kviconline.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அலுவலக முகவரி : பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, திருச்சிராப்பள்ளி-  620001, தொலைபேசி. 0431 – 2460823,2460331

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.