மிஸ்டு கால் போதும் உங்க பணத்தை திருட…
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்துவிட்ட இன்றைய நிலையில் அதை சார்ந்த மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
முக்கியமாக சமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு நபரின் மொபைலுக்கு தெரியாத எண்ணில் இருந்து பலமுறை அழைப்பு வந்துள்ளது. ஆனால் மறுமுனையில் யாரும் பேசாமல் சில நொடிகளுக்கு பின்பு தானாக அழைப்பு நின்று போனது.
சில நிமிடங்களுக்கு பின் அவரது செல்போனிற்கு 50 லட்சம் ரூபாய் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுபோன்று பல மோசடிகள் தற்போது நாட்டின் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.
முக்கியமாக இதுபோன்ற பணப்பரிவர்த்தனைகள் நடைபெறும் போது உங்களுடைய சிம் கார்டின் அடிப்படையிலான ஓடிபி ஒன்று உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். ஆனால் மேலே சொன்ன அந்த நபருடைய சம்பவத்தில் ஒரு மிஸ்டு காலின் மூலமே அவருடைய பணம் திருடப்பட்டுள்ளது. இதற்குக் சிம் ஸ்வாப் என்ற மோசடி முறை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சிம் ஸ்வாப்:
சிம் ஸ்வாப் என்பது பெரும்பாலும் மொபைல் எண்ணின் உரிமையாளர்களின் கவனக்குறைவால் நடக்கும் மோசடி ஆகும். முக்கியமாக இன்டர்நெட் மற்றும் இமெயில்களில் வரும் தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்வதின் மூலமே இந்த மோசடியில் நீங்கள் சிக்கிக் கொள்ளக்கூடும். இந்த சிம் ஸ்வாப்பிண் மூலம் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் உங்களது மொபைல் எண்ணை மிக எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மோசடி கும்பலிடம் உள்ள சிம்கார்டில் உங்களது மொபைல் எண் ஆக்டிவேட் செய்யப்பட்டு உங்களது வங்கி கணக்கு, ஓடிபி உட்பட அனைத்தும் அவர்களிடம் உள்ள சிம்கார்டுக்கு அனுப்பப்படும். மேலும் உங்கள் அக்கவுண்ட் நம்பரை உள்ளீடு செய்து உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அவர்கள் மிக எளிதாக திருடி விடுவார்கள்.