240 கி.மீ அளவிற்கு ஓடும் புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரெடி
சர்வதேச சந்தையே திரும்புமாமே…லோன்சின் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மத்தியில் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.சீனாவை சேர்ந்த இருசக்கர வாகன பிராண்டு, லோன்சின் மோட்டார்சைக்கிள்ஸ் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய லோன்சின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரியல் 5ஜி என அழைக்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தி 850 GS மற்றும் தி 900 R மாடல்களுக்கான என்ஜின்களை லோன்சின் உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது.புதிய லோன்சின் ரியல் 5ஜி மாடல் தோற்றத்தில் ஸ்போர்ட் டிசைன் மற்றும் மேக்சி ஸ்கூட்டர் போன்று காட்சியளிக்கிறது. இதில் ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட், ஸ்மோக்டு வைசர், பாடிவொர்க் முழுக்க ஷார்ப் கட், கிரீஸ் கொண்டிருக்கிறது.
இதன் மத்தியில் வழக்கமான மேக்சி ஸ்கூட்டரில் உள்ளதை போன்ற ஸ்பைன் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த இ ஸ்கூட்டர் 125சிசி பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையானதாக இருக்கும்.இந்த ஸ்கூட்டரின் மத்தியில் எலெக்ட்ரிக் மோட்டார் மவுண்ட் செய்யப்பட்டு உள்ளது. இது 15 ஹெச்பி பவர் கொண்டிருக்கிறது.
புதிய லோன்சின் ரியல் 5ஜி மணிக்கு அதிகபட்சம் 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். இதனுடன் 1.84 கிலோவாட் சார்ஜர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை இரண்டு மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும்.
எல்இடி இலுமினேஷன் கொண்டிருக்கும் ரியல் 5ஜி மூன்று விதமான ரைடிங் மோட்கள், டிராக்ஷன் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் வார்னிங் லைட்கள், சார்ஜிங் போர்ட், ரிவர்ஸ் கியர் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் ஆஃப்செட் ரியர் ஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் சிங்கில் டிஸ்க், பின்புறம் டிரம் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.தற்போது லோன்சின் பிராண்டு சர்வதேச சந்தையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாடலின் இந்திய வெளியீட்டை உடனடியாக எதிர்பார்க்க முடியாது.