‘நான் முதல்வன்”திட்டத்தின் கீழ் பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை முகாம்.
தமிழகமுதலமைச்சர் அவர்களின் ‘நான் முதல்வன்”திட்டத்தின் கீழ் பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை முகாம் நடத்திடுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம்முகாம்களின் முக்கிய நோக்கமானது மாணவர்களை உயர்கல்வி அல்லது திறன் பயிற்சிக்காக ஊக்குவித்தல் ஆகும். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 14.09.2024 அன்று இந்திரா கணேசன் கல்லூாயில் இம்முகாம் மாவட்டஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இம்முகாம்கள் காலை 9.00 மணிக்கு துவங்கி மாலை வரை நடைபெறும்.
இம்முகாமில் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து அலுவர்களால் எடுத்துரைக்கப்பட உள்ளது. மேலும் எவ்வாறு உகந்த கல்விபடிப்பினை தேர்ந்தெடுப்பது வேலைவாய்ப்பினை பெறுவது தொடர்பாக எடுத்துரைக்கப்பட உள்ளது.
அறிவியல் மற்றும் கலைகல்லூரிகள்,பொறியியல் கல்லூரிகள்,பாலிடெக்னிக் கல்லூரிகள்,தொழில் பயிற்சிநிலையங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு உயர்கல்வி தொடர்பாக வழிகாட்டல்களையும் தங்கள் நிறுவனத்திற்கான மாணவர்கள் சேர்க்கையையும் மேற்கொள்ளஉள்ளனர். மேலும் உயர்கல்வி சேர்க்கை மற்றும் வங்கி கடனுதவி தொடர்பாக அரங்குகள் அமைத்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படஉள்ளது.
மேலும் வங்கிகடன் உதவித்திட்டம் மற்றும் கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பாக முன்னோடி வங்கிஅலுவலர்கள் எடுத்துரைக்க உள்ளனர். அரசின் பல்வேறு துறைசார்ந்த திட்டங்கள் குறித்து மகளிர் திட்டஅலுவலர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் பிற்படுத்தப்பட்ட நலஅலுவலர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியோர் எடுத்துரைக்க உள்ளனர். மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் குழந்தைகள் நல அலுவலர் அவர்களால் பெண்களுக்கான சிறப்புதிட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது.
எனவே 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்ற மாணவர்கள் திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 14.09.2024 அன்று இந்திரா கணேசன் கல்லூரியில் நடைபெறும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்டத கவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு:
உதவி இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.