சென்னை, செப்.12-
ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி, 230 வகையான பால் பொருட்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம், மாதம் ரூ.5 கோடி வரை விற்பனை நடந்து வருகிறது.
ஆவினுக்கு பால் வழங்குவதற்காக, கிராமம், ஒன்றியம், மாவட்ட அளவில் பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. பால் விற்பனையை தவிர, அவற்றுக்கு மற்ற வருமானம் இல்லை. இதனால், கூட்டுறவு சங்கங்கள் தவித்து வந்தன. இந்நிலையில்,கூட்டுறவு சங்கங்களின் வருவாயை அதிகாிக்கும் வகையில், பால் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதன் வாயிலாக, கூட்டுறவு தங்கங்களுக்கு நிரந்தரமான வருவாய் கிடைக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, ஆவினுக்கும் ஒரே மாதத்தில் கூடுதலாக, ரூ.80 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தொிவித்தன.
எனவே, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பால் பொருட்கள் மற்றும் பண்டிகை கால இனிப்புகள் விற்பனையை அதிகாிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.