Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அடுக்குமாடி குடியிருப்பில் நன்மைகள்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அடுக்குமாடி குடியிருப்பில் நன்மைகள்

தான் வாழும் வீட்டை ஒருவர் எத்தனை தூரம் நேசிக்கிறார் என்பது அவர்தம் பேச்சிலேயே தெரிந்து கொள்ளலாம். சொந்த வீடோ வாடகை வீடோ தன் வீட்டைப் பற்றி பேசும்போது அவர்தம் பேச்சில் பெருமை கொப்பளிக்கும்.

நகரங்களில் வீட்டுமனை வாங்கி அதில் வீட்டைக் கட்டமைப்பது என்பது இயலாத காரியம். அனைத்து விதமான சமூகக் கட்டமைப்புகள் கொண்ட பகுதியில் வீட்டு மனைகள் காண்பது அரிதாகிவிட்டது. அதனால் சொந்த வீட்டுக் கனவில் மிதக்கும் அனைவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர். மாத வருமானத்தில் வாழ்பவர்களும், தொழில் முனைவோரும் இதனை சிறந்த முதலீடுகளாகப் பார்கின்றனர்.

நவீன அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கையை விரும்பாதவர்கள் பலர் இருப்பினும் அது தரும் சவுகர்யங்களை குறைத்து மதிப்பிட முடியாது. வீட்டுப் பராமரிப்பு என்பது மிகப் பெரிய பணி. கணவன், மனைவி என்று இருவரும் வேலைக்குச் செல்லும் இந்தக் கால கட்டத்தில் சிறு, சிறு ரிப்பேர் வேலைகள் ஏற்ப்பட்டால் தனி வீடு என்றால் திண்டாட்டாம்தான்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

அடுக்குமாடிக் குடியிருப்பு எனில் அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்போர் நலச் சங்கத்தின் பணியாளர்கள் அதை நிவர்த்தி செய்து விடுகின்றனர். திடக்கழிவு, கழிவு நீர்அகற்றல், நீர் விநியோகம், சலவை போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் பொதுவாய் கிடைக்கின்றன.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

அடுக்குமாடி வீடுகளின் உள்ளமைப்பில் சின்னச் சின்ன சங்கதிகளைச் சரிபார்த்தால் மிகச் சிறந்ததாக உங்கள் வீட்டை மாற்றிவிட முடியும். வரவேற்பறைக்கு அதிக இடத்தை ஒதுக்கினால் வீடு சிறியதாகத் தோன்றும்.

சாப்பிடும் அறை, சமையலறை போன்றவற்றை வரவேற்பறையின் ஒரு பகுதியாக வடிவமைக்கலாம். குளியலறை, கழிவறை போன்றவற்றைத் தனித்தனியே அமைத்தால் அதுவே அதிக இடத்தை ஆக்ரமித்து விடும். அதன் ஒரு அங்கமாக வாஷ்பேசின் அமைத்தால் இடம் மீதியாகும். இது போன்ற சின்ன சின்ன விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் சிறிய வீடுகூட சிறிது விசாலமாய்த் தெரியும்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் வாங்குவோர் முக்கியமாக நிலத்திற்கான ஆவணங்கள், கிரயப் பத்திரம், பட்டா, சிட்டா, அங்கீகாரச் சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ், சட்ட வல்லுநர் ஒப்புதல் சான்றிதழ், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும்.

கட்டப்பட்ட இடத்துக்கான மண் பரிசோதனை, கான்கிரீட் பரிசோதனை சான்றிதழ் உள்ளனவா என்று ஆராய வேண்டும். அடுக்குமாடிக் குயிருப்பின் மாடித் தளங்கள் அமைக்க அனுமதிபெறப்பட்டுள்ளனவா என்பதை விசாரித்து அறிய வேண்டும். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்பது மட்டும் முயக்கியமல்ல. அதன் தரம் உறுதியாக இருக்கிறதா என்பதும் முக்கியம்.

வெளிநாடுகளில் குறுகிய பரப்பளவு கொண்ட இடத்திலும் வீடுகளை அழகாகக் கட்டமைத்து அசத்துகிறார்கள். ஒரே அறையிலேயே அனைத்து வகையான தேவைகளையும் நிவர்த்தி செய்யும் அளவிற்கு இடவசதியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சிறிய இடத்திற்குள் எப்படி இத்தனை வசதிகளை உள்ளடக்கிக் கொள்ள முடிகிறது என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்கள்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.