திருச்சியில் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளும் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு வரப்பிரசாதம்..!’
திருச்சி, கருமண்டபம், பால்பண்ணை பேருந்து நிலையம் அருகில், ஏ.ஆர்.ஆர். கட்டட வளாகத்தில் இயங்கி வருகிறது (RASHINEE DESINGS AND PHOTOGRAPHY)
திருமணம் மற்றும் இனிய விசேஷ நிகழ்வினை புகைப்படம் மற்றும் வீடியோ தளத்தில் உட்புற, வெளிப்புற படப்பிடிப்பில் தரமான சேவைகளை அளித்து திருச்சி மாநகர மக்களின் நன்மதிப்பை பெற்றதையடுத்து தற்போது திருச்சி, தில்லைநகர், 6வது குறுக்குத் தெரு, கிழக்கு விஸ்தரிப்புச் சாலையில் புதிய, பெரிய இடத்தில் தடம் பதித்துள்ளது ராஷினி டிசைன்ஸ் அண்ட் போட்டோகிராபி.
அதன் உரிமையாளர் ஜி.எம்.விநோத் நம்மிடம் கூறுகையில்,
”சாதாரணமாக ஒரு ஸ்டூடியோ உரிமையாளர் திருமண நிகழ்வு ஒன்றை கவரேஜ் செய்த பின் போட்டோ ஆல்பம் டிசைனிங், பிரிண்டிங், வீடியோ எடிட்டிங், லேமினேஷன் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான நினைவு பரிசுப் பொருட்களை வாங்குவது என ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு இடத்தை அணுக வேண்டும். அது போன்று இல்லாமல் ஒரே இடத்தில் அனைத்து வேலைகளையும் நாங்கள் முடித்துத் தருவது அவர்களுக்கு பெருமளவு நேரத்தை மிச்சப்படுத்தும்.
குறைந்த பட்ஜெட் ஆல்பம் முதல் உயர்ரக டிசைன் ஆல்பங்களை நாங்களே டிசைன் செய்து குறித்த நேரத்தில் ஸ்டூடியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். எங்களிடம் சிந்தடிக் உட்பட பல்வேறு தரத்திலான பிரிண்ட் செய்யப்பட்ட ஆல்பம், அக்ரலிக் பேட், எம்போஸிங் பேட் மற்றும் சூட்கேசில் மணமக்கள் புகைப்படம் அச்சடிக்கப்பட்ட ஆல்பம் என பல்வேறு வகைகளில் தரமாக Finishing செய்து தருகிறோம்.
அத்துடன் 4k தரம் கொண்ட கேமிராவில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவினை புதுமையான கோணத்தில் தரம் குறையாமல் எடிட் செய்து தருகிறோம்.
மணமக்களின் புகைப்படங்கள் உட்பட அனைத்து விதமான புகைப்படங்களையும் தரமான கொண்டு, சரியான விலையில் லேமினேஷன் செய்து தருகிறோம். எங்களிடம் 300க்கும் மேற்பட்ட கிப்ட் பொருட்கள் கிடைக்கும். புதிய, புதுமையான முறையில் இந்த கிப்ட் பொருட்கள் அமைந்திருக்கும். லேமினேஷன் கிப்டிற்கு கீழ்புறம் பார்கோடு இருக்கும். அந்த பார்கோட்டை ஸ்கேன் செய்தால் திருமண வாழ்த்தோ, பிறந்த நாள் வாழ்த்துப் பாடலோ, நீங்கள் விரும்பிய பாடல் ஒன்றை கேட்டு மகிழலாம்.
வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன் கூடிய ரேடியம் அலாரம் கிளாக், 27 வகையான கீசெயின்கள், எல்.இ.டி. பொருத்தப்பட்ட கிப்ட் ப்ரேம், கண்ணாடி போல் தெரியும் கிப்ட் பொருளின் கீழே பொருத்தப்பட்ட பட்டனை அழுத்தினால் மணமக்களின் புகைப்படம் ஒளிரும் மேஜிக் மிரர், சிறுவர், சிறுமியர்க்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் புகைப்படம் பதிக்கப்பட்ட உண்டியல், மேஜிக் தலையணை என ஏராளமான, புதுமையான, வாடிக்கையாளர்களை கவரும் கிப்ட் ரகங்கள் உருவாக்கித் தருகிறோம்.
மேலும் புகைப்படங்களை அவர்கள் இடத்திலேயே சென்று வால் பெயிண்டிங் செய்து தருகிறோம். பென்சில் ஆர்ட் செய்து தருகிறோம்.
இங்கே மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆல்பம் டிசைன் செய்பவர்கள், வீடியோ எடிட்டிங், பென்சில் ஆர்ட், போட்டோ ப்ரேம் லேமினேஷன் செய்பவர்கள் எங்களை அணுகினால் அவர்களுக்கும் நாங்கள் பணி வழங்க தயாராக உள்ளோம்.
திருச்சியில் பத்து கி.மீ. சுற்றளவில் உள்ள ஸ்டூடியோவிற்கு நாங்களே நேரடியாக சென்று ஆல்பம், வீடியோ எடிட்டிங் ஆர்டர் புக் செய்வதோடு, டெலிவரியும் செய்து தருகிறோம். 10 கி.மீ. சுற்றளவினை தாண்டி உள்ளவர்களுக்கு பார்சல் மூலம் டெலிவரி செய்கிறோம்” என்றார்.