திருச்சியில் வியக்க வைக்கும் வெட்டிங் பாரடைஸ்
ஒரு திருமண விழா சிறப்பாக நடைபெற, திருமண அழைப்பிதழ் தொடங்கி தேனிலவு வைபவம் வரை அனைத்து தருணங்களையும் ஒரே இடத்தில் சிறப்பாக வடிவமைத்து தரும் ஒரு நிறுவனமாக விளங்குகிறது திருச்சி, சாஸ்திரி சாலையில் உள்ள “மாங்கல்யா வெட்டிங் பாரடைஸ்” (MANGALYAA WEDDING PARADISE).
அழைப்பிதழ் முதல் தேனிலவு வரை
நவீன வடிவில் திருமண பத்திரிகைகள், தாம்பூலப் பைகள், பரிசாகத் தர வெள்ளி கலைப் பொருட்கள், திருமண நிகழ்வுகளைப் பதிவு செய்ய வீடியோ மற்றும் புகைப்பட ஆல்பம், தேனிலவு செல்ல விரும்பும் இளம் தம்பதியினர்க்கு அவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப திட்டமிட்டு ஏற்பாடு செய்து தருகிறோம்.
“பி.டெக்., எம்.பி.ஏ., படிப்புகளை பிரிட்டனில் நிறைவு செய்து, அங்கேயே சிறிது காலம் வேலை பார்த்த பின், சொந்தமாக தொழில் தொடங்கும் ஆர்வத்துடன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் திரும்பினேன். நான்கைந்து ஆண்டுகள் இது குறித்த சிந்தனையில் காலத்தை கழித்த என் மனதில் உதயமானது தான் ‘மாங்கல்யா வெட்டிங் பாரடைஸ்’, என்கிறார் இதன் உரிமையாளர் வேல்சண்முகம்.
‘திருமண அழைப்பிதழ் தொடங்கி தேனிலவு வரை’ என்ற புதுவித சிந்தனை உங்களுக்கு எவ்விதம் உருவானது?
பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி கிராமம் தான் என் சொந்த ஊர். அங்கு கைத்தறி நெசவு கைலி உற்பத்தி செய்து தமிழகம் முழுவதுமான வணிகம் தான் எங்களது சொந்தத் தொழில். இதனால் அனைத்து இடங்களுக்கும் பயணிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. என்ன தொழில் தொடங்கலாம் என்ற சிந்தனையில் மனம் பயணப்பட்ட போது உதயமானது தான் திருமண அழைப்பிதழ்கள் விற்பனையகம் தொடங்க வேண்டும் என்று. திருமண அழைப்பிதழ்கள் மட்டும் உருவாக்கி விற்பனை செய்வது ஒரு ரகம். நாம் அது போல் மட்டுமல்லாமல் அவர்களுக்கான அதனைச் சார்ந்த இதர தேவைகளையும் பூர்த்தி செய்து தந்திட வேண்டும் என்று முடிவெடுத்தேன். அந்த முடிவு தான் மாங்கல்யா வெட்டிங் பாரடைஸ் என்ற பெயரில் நான்கு மாதங்களுக்கு முன்பு இங்கே விற்பனையை தொடங்கி நடத்தி வருகிறேன்.
திருமண அழைப்பிதழ்கள் என்னென்ன வடிவங்களில், விலைகளில் விற்பனை செய்து வருகிறீர்கள்?
மிகக் குறைந்த விலையிலான இரண்டு ரூபாய் ஐம்பது பைசாவில் இருந்து எங்கள் விற்பனைத் தொடங்குகிறது. குறைந்தபட்சமாக கார்ட் சைஸ் நாலுக்கு நாலு இன்ச் என்கிற அளவில் இருந்து அதிகபட்சமாக பதினெட்டுக்கு பதினெட்டு இன்ச் வரையிலான பல்வேறு அளவுகளில், டிசைன்களில், வண்ணங்களில் அழைப்பிதழ்கள் உருவாக்கி விற்பனை செய்வது எங்களின் தனிச் சிறப்பு. சுருங்கச் சொன்னால் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான அழைப்பிதழ்கள் இங்கே விற்பனைக்கு உள்ளன.
புதுவிதமான வடிவங்களில் திருமண அழைப்பிதழ்கள் எதுவும் உங்களிடம் உள்ளதா.?
கண்டிப்பாக.. லேசர் கட்டிங் கார்ட் (LASER CUTTING INVITATION). பிளைவுட் அட்டையில் வாடிக்கையாளர் விரும்பும் டிசைன் பதிந்து, அழைப்பிதழை அதனுடன் இணைத்துக் கொள்ளலாம். அதனைப் பெற்றுக் கொள்பவர்கள் டேபிளில் அழகுப் பொருளாகவும், ஏதேனும் புகைப்படங்கள் சொருகிக் காட்சிப் பொருளாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த லேசர் கட்டிங் கார்ட் ரூ.170லிருந்து கிடைக்கிறது. எலைட் கார்ட் எனப்படுபவைகள் அறுபது ரூபாயில் இருந்து இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வரை உள்ளது.
திருமண அழைப்பிதழ்களில் புதுமை புகுத்தும் திட்டம் ஏதேனும் உள்ளதா?
ஆமாம். அதற்கான முயற்சிகளில் இறங்கி, அதிலும் முழு வடிவம் பெற்றுவிட்டோம். இனி தான் அதனை வாடிக்கையாளர்கள் மத்தியில் பரவலாக்க வேண்டும். பிரிமியம் கார்ட்ஸ் (PREMIUM CARD BOX) அழைப்பிதழ் பெட்டிகள். ஒரு அழைப்பிதழ் பெட்டியானது, ஆறு இன்ச் உயரம் ஒரு அடி அகலம் ஒன்னரை அடி நீளம் கொண்டதாக இருக்கும். அதனுள் அழைப்பிதழ் இருக்கும். மேலும் பாதாம், பிஸ்தா பருப்பு வகைகள், பேரீச்சம் பழம், உலர் பழங்கள் உள்ளே வைக்கப்பட்டு இருக்கும். பார்க்கவே பிரமாண்டமாக அமைந்திருக்கும்.
பிரிமியம் கார்ட்ஸ் அழைப்பிதழ் பெட்டியின் உள்ளே, திருமண வீட்டார் உறவினர்க்குப் பரிசுப் பொருட்கள் வைத்துக் கொடுக்கும் அளவிற்கு வெற்றிடம் இருக்கும். இந்த வகையிலான அழைப்பிதழ் உள்ளிட்ட பிரிமியம் கார்ட்ஸ் பெட்டிகள் இரண்டாயிரம் ரூபாய் தொடங்கி ஆறாயிரம் ரூபாய் மதிப்பு வரை உள்ளன. பரிசுப் பொருட்கள் வைத்துத் தருவதற்கென்று அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ராஜஸ்தான் மேக்கிங் அலங்காரப் பெட்டிகள் எங்களிடம் விற்பனைக்கு உள்ளன. பெட்டிக்குள் வைக்கும் அழைப்பிதழையும் வாடிக்கையாளர்கள் தரும் வாசகங்களுடன் நாங்களே டிசைன் செய்து அச்சடித்துத் தருகிறோம்.
திருமணஅழைப்பிதழ் முதல் தேனிலவு வரை என்று சொன்னீர்கள். வேறு என்னவிதமான சேவைகள் செய்கிறீர்கள்.?
தாம்பூலப் பைகளும் நாங்களே தயாரித்துப் பிரிண்ட் போட்டுத் தருகிறோம். பரிசாகத் தருவதற்கு என்றே வெள்ளிப் பொருட்கள் மற்றும் வெள்ளி கலைப் பொருட்களும் எங்கள் விற்பனையகத்தில் வைத்துள்ளோம். திருமண நிகழ்வுகளைப் பதிவு செய்யும் விதமாக வீடியோ மற்றும் புகைப்பட ஆல்பமும் வாடிக்கையாளர்கள் என்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவில் தயாரித்துத் தருகிறோம். மேலும் தேனிலவு செல்ல விரும்பும் இளம் தம்பதியினர்க்கு அவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப திட்டமிட்டு ஏற்பாடு செய்து தருகிறோம். ஒரு திருமணத்தில் மணமகன், மணமகள் என இருவீட்டாருக்கும் இடையே அழைப்பிதழில் தொடங்கும் பந்தம், சந்தோஷம், மன நிறைவு, ஆத்ம திருப்தி அனைத்தையும் செம்மையுற வழங்குவதே மாங்கல்யா வெட்டிங் பாரடைஸ்ன் மிக முக்கியமான நோக்கமாகும்”.
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.- படங்கள் : மகேந்திரன்