Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

தன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர் ஆர்.மேகநாதன்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தன்னம்பிக்கை தருவதே அழகுக்கலை… ZAZSLE நிறுவனர் ஆர்.மேகநாதன்

காலையில், வீட்டைவிட்டு வெளியில் கிளம்பும் முன் தலையில் எண்ணை தடவி, முகத்திற்கு பவுடர் பூசினாலே உங்கள் முகம் பொலிவுடன் இருப்பதாக நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் நீங்கள் இன்னும் 21ம் நூற்றாண்டின் வாயிற் படியில் கூட கால் வைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்பது, நீங்கள் அணியும் ஆடைகள் தான் உங்கள் மீதான மதிப்பை அளவீடு செய்யும் காரணிகளாகும். ஆனால் உங்களை நீங்களே மதிப்பீடு செய்ய வேண்டுமென்றால் உங்களுக்கான மதிப்பெண்களை அறிய ஒரு ப்யூட்டி பார்லர் செல்லுங்கள்.!

அழகிப் போட்டிகளில் பங்கெடுப்பவர்கள், திரை நட்சத்திரங்கள், தொலைக்காட்சியில் நடிப்பவர்கள், விளம்பரங்களில் நடிப்பவர்கள், வரவேற்பரை ஊழியர், விமானப் பணிப்பெண் என ஒரு குறிப்பிட்ட தளங்களுள் உள்ளவர்கள் தான் தங்களை பொலிவுற வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் மலையேறிவிட்டன. எல்லோருக்கும் பொது வெளியில் தங்களை அழகாக காட்டிக் கொள்ளும் அக்கறை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

அழகிப் போட்டியில் இந்திய பெண்களான சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் என அடுத்தடுத்து தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்தே இந்தியாவில் அழகுக் கலை வர்த்தகம் பன்மடங்கு பெருகத் தொடங்கியது. சென்னை, பெங்களுர் போன்ற பெரு நகரங்கள் முதல் கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களில் ப்யூட்டி பார்லர் இல்லாத சாலைகள் வெகு சொற்பம் என்ற நிலைக்கு அழகு கலை நிலையங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது.

பெண்களுக்கான சுயதொழில் என்றாலே அது தையல், கைவினைப் பொருட்கள், அப்பளம், வடாம் ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்வது என்ற நிலையெல்லாம் கடந்து இப்போது வேறுவேறு தளங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில், முன்வரிசையில் நிற்பது அழகு கலை நிலையங்கள் தொடங்குவது தான்.!கடன் வழங்கும் வங்கிகளும், தொழில் பட்டியலில் அழகு நிலையங்களையும் சேர்த்து, தாராளமாக கடன் வழங்குகின்றன.

நாடு முழுக்க 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழகு நிலையங்கள் சிறிதும் பெரிதுமென உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அழகு சாதன பொருட்களின் வர்த்தகம் மட்டும் சுமார் 3,000 கோடி ரூபாயை தாண்டி நடைபெறுவதாக சந்தை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் 35 சதவீத சந்தையை மெட்ரோ நகரங்களே ஆக்ரமிக்கின்றன. 2022ம் ஆண்டில் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ஊழியர்கள் இந்த துறையில் பணியாற்றுவார்கள் என கூறுகிறது ஒரு புள்ளி விபரம்.


பெருநகரங்களில் ஆரம்பிக்கப்படும் அழகு நிலையங்கள், தங்கள் வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் FRANCHISEE என்ற உத்தியை கையாண்டு பல்வேறு இடங்களிலும் தங்கள் கிளைகளை அமைத்து வருகின்றன. பெரு நகரங்களிலிருந்து மாநகருக்குள் நுழைவது சாத்தியம். ஆனால் மாநகரிலிருந்து பெருநகரங்களுக்குள், அதுவும் அழகு கலை போன்ற தொழிலில் கால்பதிப்பது அசாத்தியம் என்று தான் கூற வேண்டும். அத்தகையதொரு தடத்தை தான் பதித்து வருகிறது ZAZZLE.

திருச்சி தில்லைநகர், பிரதான சாலையின் 11வது கிராஸ் பகுதியில் உள்ளது ZAZZLE BRIDAL STUDIO. இதன் கிளை திருச்சி, கன்டோண்மென்ட், ஐயப்பன் கோவில் அருகிலும் தஞ்சை, கோவை தாண்டி பெருநகரமான சென்னையிலும் தடம் பதித்து வருகிறது. “உங்களை நீங்கள் அழகுப்படுத்திக் கொண்டால் மற்றவர்கள் பார்வைக்கு நீங்கள் அழகாகத் தெரிவீர்கள். ஆனால் உங்களை நீங்கள் உற்சாகமாக வைத்துக் கொள்ள விரும்பினால் அழகுக் கலை என்பது ஆடம்பரத்தை தாண்டி அத்தியாவசியமாகிறது” என்கிறார் இத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ZAZZLE BRIDAL STUDIO-வின் உரிமையாளர் ஆர்.மேகநாதன்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

ZAZZLE BRIDAL STUDIO வெகு நேர்த்தியாக, மிகுந்த பொருட் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு BRIDAL STUDIO-விற்கு இத்தகைய உயர்தர கட்டமைப்புகள், செலவுகள் அத்தியாவசியமா என்ற நம் கேள்விக்கு பதிலுரைத்த மேகநாதன்,

மனஅழுத்தம் தரும் வாய்ப்புகள் நிறைந்த நகர்ப்புற உலகில் உங்களை கூலாக இருக்கச் செய்வது முதலில் அழகு நிலையங்கள் தான். அழகு கலை நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒரு சிறந்த அனுபவம் பெற எவ்வளவு பணத்தையும் செலவழிக்க தயாராக இருக்கிறார்கள். அதை கருத்தில் கொண்டே, எங்கள் நிலையத்தின் உள்கட்டமைப்பானது வாடிக்கையாளரின் மனதை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெல்லிய இனிய இசை, காஸ்மெடிக்ஸ் குறித்த புரிந்துணர்வுடன், ஹேர் கலரிங், ஹேர் டிசைனிங், ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட், பாடி மசாஜ், நெயில் ஆர்ட், கேசம் மற்றும் தோல் பராமரிப்பு என அனைத்து துறையிலும் படித்த, அனுபவம் பெற்ற அழகுக் கலை நிபுணர்களையே நாங்கள் பணியில் அமர்த்தியுள்ளோம். நாளுக்கு நாள் இத்துறையில் ஏற்படும் வளர்ச்சி, புதுமைகளை விழிப்புடன் கவனித்து அதை உடனுக்குடன் நடைமுறைப்படுத்துவதே எங்களின் சிறப்பம்சம்.

ப்யூட்டி பார்லர் என்றாலே அங்கு பெண்களின் வரவு தானே அதிகமாக இருக்கும்.?
உண்மை தான். பொதுவாக ப்யூட்டி பார்லர் என்றாலே அது பெண்களை தான் ஞாபகப்படுத்துகிறது. ஆனால் இப்போது அப்படியல்ல. ஆண்கள், தங்கள் தோற்றங்களைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரிப்பதால் அழகு நிலையங்களுக்கு ஆண்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. காரணம். அவர்களின் தோற்றப் பொலிவே அவர்களுக்கான தன்னம்பிக்கையை தருகிறது.

அகம், புறம் என இரண்டும் ஒன்றென கலப்பதே ‘ஆளுமை வளர்ச்சி’ (PERSONALITY DEVELOPMENT) எனக் கூறலாம். ஒரு நேர்முகத் தேர்விற்கு நீங்கள் செல்கிறீர்கள் என்றால் அங்கு உங்கள் அறிவும், மதிப்பெண்களும் முதன்மையாக இருக்கும். அதே நிறுவனத்தில் நீங்கள் ஒரு மேலாளராக அல்லது முக்கிய பொறுப்பினை ஏற்பதாக இருந்தால் அன்றிலிருந்து நீங்கள் உங்களை பொலிவுற வைத்துக் கொள்ள வேண்டும். அரைகுறை தாடியுடன், சரியாக தலைவாராத, அயர்ன் செய்யாத சட்டையுடன் நீங்கள் அந்த வேலையில் ஈடுபட முடியாது. அங்கு திறமையை தாண்டி உங்கள் தோற்றம் முக்கியம் பெறுகிறது.


எங்கள் நிலையத்திற்கு வரும் வாடிக்கை யாளரின் தோற்ற அமைப்பை கண்டவுடன், அவர் எதிர்பார்ப்பைவிட மேலான சில விஷயங்களை பரிந்துரைப்போம். அதை அவர் நிச்சயமாக விரும்பும் வண்ணமே அமையும். ஆண்கள், பெண்கள் என இருவருக்குமே இதே முறையைத் தான் கையாள்கிறோம்.
நீங்கள் எந்த தளத்தில் இயங்க வேண்டுமோ, அதாவது எந்த வேலையில் ஈடுபடுகிறீர்களோ அதற்கேற்பவே உங்களின் தோற்றம் அமைய வேண்டும். ஒருவரின் அழகு, அலங்காரமே அவரின் நடை, பாவணையை வேறுபடுத்திக் காட்டச் செய்கிறது. மாநிறம் கொண்ட ஒரு பெண் எங்கள் ப்யூட்டி பார்லருக்கு வந்த போது அவர் முகத்தை மேலும் கறுப்பாக்கி பின்பு அழகுபடுத்தினோம். சிகப்பான, அழகான பெண்களை மேலும் அழகாக்குவது மட்டுமல்ல எங்கள் பணி. சுமாரான தோற்றத்துடன் உள்ளவர்களையும் அழகிய தேவதைகளாக மாற்றியமைப்பது தான் எங்களின் வெற்றி.

நாங்கள் பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருட்கள் பெரும்பாலும் அலர்ஜியை உண்டாக்காத, தரமான, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவைகளையே பயன்படுத்துகிறோம்., தலைமுடி, தாடிக்கு வண்ணம் (HAIR COLOURING) ஏற்றவும் இறக்குமதி பொருட்களையே பயன்படுத்துகிறோம். திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் என்றால் எங்களின் இந்த அணுகுமுறை தான் காரணம்.

மணமக்கள் அலங்காரம் பெறும் முக்கியத்துவம் பெறுகிறதே.?
ஆமாம். வாழ்வில் ஒரு முறை வந்து போகும் தருணம் அது. பெரும்பாலும் திருமணத்தில் மணப்பெண்கள் தங்களை எடுப்பாய் காட்ட நிறையவே மெனக்கெடுகிறார்கள். பணத்தைப் பற்றி யோசிப்பதில்லை. அவர்கள் தங்களை அழகுற உணர்ந்தால் மட்டுமே மனமகிழ்ச்சியுடன் தங்கள் சொந்தபந்தங்களை எதிர்கொள்ள முடிகிறது. தலை அலங்காரம், நகை செட், கண் இமை, ஃபேசியல், ஜடை அலங்காரம், பட்டுச்சேலை உடுத்துதல் என ஏராளமான விஷயங்கள் உள்ளது. ஒவ்வொன்றையும் நேர்த்தியாக செய்கிறோம். மணமக்கள் அலங்காரம் குறித்து நிறைய சொல்லலாம். அதில் நாங்கள் ஸ்பெஷலிஸ்டும் கூட.

கொரோனா காலத்தில் சலூன் மற்றும் ப்யூட்டி பார்லர் திறப்பதற்கு தான் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இப்போது மீண்டும் கொரோனா இரண்டாவது அலை பரவுவதாக கூறுகிறார்களே..?
லாக்டவுன் முடிந்து ப்யூட்டி பார்லர் திறக்க அனுமதிக்கப் பட்டவுடன் முதலில் திறந்தது நாங்களாகத் தான் இருக்கும். கையில் இரண்டு துளி சேனிடைஷர் தெளிப்பதுடன் எங்கள் கடமை முடிந்துவிடாது. வாடிக்கையாளர் அமரும் இருக்கை, பயன்படுத்தும் அழகு சாதன கருவிகளை தூய்மைப்படுத்துவது, முகக் கவசம் என அனைத்திலும் மிகுந்த கவனம் கொள்கிறோம். அத்துடன் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானமும் குடிக்க வழங்குகிறோம். ஞீகிஞீஞீலிணி ஙிஸிமிஞிகிலி ஷிஜிஹிஞிமிளிவில் மணப்பெண் அலங்காரம் உள்ளிட்ட அழகு சேவையினை நேர்த்தியாய் பெற்றிட +91 86820 77777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.