பிசினஸ் திருச்சி இதழின் வாசகர் விமா்சனங்கள்:
வங்கிகளை நிர்வகிக்கும் பெண் ஆளுமைகள் பகுதியில் வெளியான பஞ்சாப் நேஷனல் வங்கி, எஸ்.பி.ஐ. வங்கிகளின் மண்டல தலைமை பொறுப்பில் திறம்பட செயல்படும் இருவரின் அனுபவம் பகிர்வு இளைஞர்களுக்கு முன்னுதாரணம். க.பிரசாந்த், தில்லைநகர்
மகளிர் தின ஸ்பெஷலாக பெண் ஆளுமைகள் பற்றிய முதல் பக்க கட்டுரை பெண்கள் மத்தியில் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தொழில் சார்ந்த விழிப்புணர்வு செய்திகளை வழங்கி வரும் பிசினஸ் திருச்சி இதழுக்கு வாழ்த்துக்கள்.
க.கிருத்திகா, உறையூர்
பணத்தை எதில் முதலீடு செய்வது என்கின்ற சந்தேகங்களுக்கு தீர்வாக உள்ளது பிசினஸ் திருச்சி செய்திகள். புதுமையான கோணத்தில் இயல்பான செய்திகள்.!
எம்.பாரூக், சோழன் நகர்.
‘வியாபார சந்தையில் மகளிரின் பங்கு’ என்ற தலைப்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சாமானிய பெண்கள் பற்றி வெளியான செய்திகள் அருமை. பெண்களுக்கான பிசினஸ் வாய்ப்புகள் செய்தியும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
என்.ஜான்சி, சிந்தாமணி
புற்றுநோய்க்கு குறைந்த செலவில் சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை செய்தி கட்டுரை சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது.
ஜி.கார்த்திக், தீரன் நகர்