உடற்கல்வி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !
உடற்கல்வி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !
பாரதிதாசன் பல்கலைக்கழம் சமூகப்பணித்துறை முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்கள் நடத்திய உடற்கல்வி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு திருச்சி காட்டூர் கைலாஷ் நகர் சோலா இறகு அகாடமியில் நடைபெற்றது.
இதில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி பிரிவின் இறகுபந்து போட்டிகள் நடைபெற்றது. இதில் பல வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் குறிப்பாக ( குழந்தைபருவ ) கலந்துகொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக தஞ்ச Dr.ரமேஷ் குமார் இந்திய கூடை பந்து நடுவர் மற்றும் Dr.ராஜவேல் பாரதிதாசன் பல்கலைக்கழம் சமூகப்பணித்துறை துணை பேராசிரியர் கலந்து கொண்டார்.
உடற்கல்வி மற்றும் விளையாட்டு முக்கியத்துவம் பற்றி வழிப்புணர்வு குறித்தும் ,
விளையாட்டில் ஈடுபடுபவரை நாம் ஊக்குவிக்க வேண்டும். தனிநபர் மற்றும் குழு விளையாட்டுகளில் பங்கேற்பதால் சகிப்புத் தன்மை, தலைமைப் பண்பு, ஒற்றுமை உணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தேசப்பற்று போன்ற சிறந்த குணநலன்களையும் பெறமுடியும் என கூறினார்கள்.
செயற்பாட்டாளர் சமூகப்பணித்துறை மாணவ மாணவிகள் பி. காளிதாசன், ஜெயக்குமார், கவிராஜன், ஜெயலட்சுமி, கேஷியா ஆகியோரை வாழ்த்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.