நேர்மை அங்காடிக்கு நூல்கள் வழங்கல்
நேர்மை அங்காடிக்கு நூல்கள் வழங்கல்
திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி
வளாகத்தில் நேர்மை அங்காடி பெயரில்
ஆளில்லா கடை வைத்துள்ளனர்.
மாணவர்களுக்கு தேவையான கல்வி
உபகரணங்களுடன் பணம் செலுத்த
உண்டியல் உள்ளன. கல்வி
உபகரணங்களை விலை பட்டியலில்
உள்ளபடி பணத்தை உண்டியலில்
செலுத்தி விட்டு மாணவர்களுக்கு
தேவையான கல்வி உபகரணங்களை
எடுத்துச் செல்கின்றார்கள்.
அவ்வகையில் திருச்சி புத்தூர் கிளை
நூலக வாசகர் வட்ட தலைவரும்
எழுத்தாளரும் யோகா ஆசிரியருமான
விஜயகுமார் எழுதிய யோகா நூல்கள்
நேர்மை அங்காடிக்கு பள்ளி தலைமை
ஆசிரியர் விமலாவிடம் வழங்கப்பட்டது .
புத்தூர் கிளை நூலகர் புகழேந்தி உடன்
இருந்தார்