ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் கோபமும், எரிச்சலும்
அதிகரிக்குதாம்:
2019ல் இந்திய மக்கள் சராசரியாக ஒரு நாளில் ஸ்மார்ட்போனில் செலவு செய்யும் நேரம் 4.9 மணி நேரமாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி, வேலை, பொழுதுபோக்கு மற்றும் இதர அனைத்து தேவைகளுக்காகவும் பொது மக்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் நேரமானது 5.5, 6.9 என படிப்படியாக உயர்ந்து 25 சதவீதம் அதிகரித்து 7 மணி நேரமாக உயர்ந்துள்ளது என முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ மற்றும் சிவிஸி அமைப்பு இணைந்து தயாரித்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகப் பணிக்கு 75 சதவீதமும் கால் செய்யும் அளவீடு 63 சதவீதமும் பொழுதுபோக்கிற்காக நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஸ்பாடிபை, அமேசான் ப்ரைம் போன்ற ளிஜிஜி சேவைகளைப் பயன்படுத்தும் அளவு 59 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சமுக வலைதளம் பயன்படுத்தும் நேரம் 55 சதவீதமும் கேம் விளையாடும் நேரத்தின் அளவு 45 சதவீதம் என அதிகரித்துள்ளது.
சுமார் 2000 பேர் நாட்டின் 8 முக்கிய நகரங்களில் இருந்து கலந்து கொண்ட இந்த ஆய்வில், சுமார் 74 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தால் கோபமும், எரிச்சலும் வருவதாக தெரிவித்துள்ளனர். இந்திய மக்களின் வாழ்வில் ஸ்மார்ட்போன் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.