விலையேறும் மொபைல் போன்
‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட் டிலேயே செல்போனுக்கான டிஸ்ப்ளே டச் பேனல் உற்பத்தியை ஊக்குவிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதையொட்டி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போனுக்கான டிஸ்ப்ளே டச் பேனல் மீது 10 தீர்வை வரி விதிக்க உள்ளது. இதனால் 1.5% முதல் 3% வரை மொபைல் போன்களின் விலை உயரும் என கூறப்படுகிறது.
காதி பொருட்களுக்கு
20% தள்ளுபடி
காந்திஜியின் 151வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள காதித்துறை விற்பனை மையங்களில், அனைத்து பொருட்களுக்கும், குறிப் பிட்ட காலத்துக்கு 20% தள்ளுபடி அறிவிக்கப் பட்டுள்ளது.
திருச்சியில் 25 சார்ஜிங் நிலையங்கள்..!
மின்சார போக்குவரத் துக்கு ஒரு மிகப்பெரிய உந்துதலை அளிக்கும் விதமாக, ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, குஜராத் மற்றும் போர்ட் பிளேரில் 241 சார்ஜிங் நிலையங்களுக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழகத்தில், திருச்சியில் மட்டும் 25 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ். சேவை
ஒரு வங்கியிலிருந்து பிற வங்கிக்கு ஒரு வாடிக்கை யாளர் நெஃப்ட் சேவையில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மட்டுமே அனுப்ப முடியும். அதற்கு மேல் அனுப்ப வேண்டுமென்றால் ஆர்.டி.ஜி.எஸ். சேவைக்குள் வர வேண்டும்.
மிகப்பெரிய தொகை பரிமாற்றம் செய்யப்படும் ஆர்.டி.ஜி.எஸ். நடைமுறை என்பது தற்போது வங்கியின் வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் டிசம்பர் மாதத்திலிருந்து ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ். சேவை கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில், கடந்த ஆண்டு ஜூலையிலிருந்து நெஃப்ட், ஆர்.டி.ஜி.எஸ். சேவைக்குக் கட்டணம் விதிக்கும் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது ஞாபகம் இருக்கிறதா..?