பிசினஸ் திருச்சி பங்களிப்புடன் திருச்சியில் பரிசளிப்பு விழா
பிசினஸ் திருச்சி பங்களிப்புடன் திருச்சியில் பரிசளிப்பு விழா
வரலாற்றைப் படிப்போம்!
வரலாற்றைப் படைப்போம்!
என்ற முழக்கத்துடன்..
தமிழர் வரலாற்றை அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன்
தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் இணைந்து நடத்திய திருச்சி மாவட்டப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஐந்தாம் ஆண்டு தமிழர் வரலாறு வினா விடை விடைப் போட்டி – 2022 பரிசளிப்பு விழா மற்றும் திருச்சி கல்லூரி மாணவர்களுக்கான கலக்க வராங்க தமிழ்ப் பசங்க எனும் கலைநிகழ்ச்சியும் கடந்த 08-10-2022 அன்று தெப்பக்குளம்
பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்டத்தை சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழர் வரலாறு வினாப் விடைப் போட்டியில் தேர்ச்சிப் பெற்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன
பரிசுகளை தெப்பக்குளம், பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திருவாளர். ஞானசுசீகரன் அவர்களும், தூய வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருள்திரு. ஜோசப் கென்னடி அவர்களும், கலைக் காவேரி கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் சதிஷ் குமார் அவர்களும், தூய வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழ் ஆசிரியர் ஐயா அந்தோணி துரை அவர்களும், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர். தண்ணிர். நீலமேகம் அவர்களும், தமிழகப் பெண்கள் செயற்களம் மாநில ஒருங்கிைப்பாளர் திருவாளர். இசைமொழி அவர்களும் அளித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
பரிசுகள் விவரம் :
கல்லூரி அளவிலான முதல் போட்டிக்கான
முதல் பரிசு ரூபாய் 15,000/- ரூபாய் (முதல் பரிசிற்கான 90% சதவீத மதிப்பெண் யாரும் பெறவில்லை) இரண்டாம் பரிசு ரூபாய் 10,000/- (இரண்டாம் பரிசிற்கான 80% சதவீத மதிப்பெண் யாரும் பெறவில்லை)
மூன்றாம் பரிசு ரூபாய் 5,000/- ச. ஜாஸ்மின் இளங்கலை கணிதம் உருமு தனலட்சுமி கல்லூரி,
காட்டூர், திருச்சி ஆகியோர் பெற்றுள்ளார்
கல்லூரிக்கான இரண்டாம் போட்டியில் முதல் பரிசு ரூபாய் 10,000/- (முதல் பரிசிற்கான 90% சதவீத மதிப்பெண் யாரும் பெறவில்லை)
இரண்டாம் பரிசு ரூபாய் 7,000/- ப. அருண் இளங்கலை இயற்பியல் 3ஆம் ஆண்டு தந்தை பெரியார் அரசு கலைக் கல்லூரி, திருச்சி.
மூன்றாம் பரிசு ரூபாய் 5,000/- ச.க. சுவாமிநாதன் இளங்கலை தமிழ் 3ஆம் ஆண்டு பிஷப் ஹீபர் கல்லூரி,திருச்சி.செ. காவியா இளங்கலை தமிழ் 3ஆம் ஆண்டு பிஷப் ஹீபர் கல்லூரி,திருச்சி ஆகியோர் பெற்றனர்.
மேலும் பல கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுசாக ரூபாய் 1000/- யும் ( முதல் மூன்று பரிசுகளை அதற்கான சதவீதம் பெறவில்லை எனில் அதனையும் கூடுதலாக ஊக்கப் பரிசில் இணைக்கப்பட்டுள்ளது.
பள்ளி அளவில் தொகுதி ஒன்றில் முதல் பரிசு ரூபாய் 10,000/-
இரண்டாம் பரிசு ரூபாய் 7,000/- யை ம. யாழினி 10ஆம் வகுப்பு பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி.
மூன்றாம் பரிசு ரூபாய் 5,000/- யை 1. மு. கிஷோர்குமார் 10ஆம் வகுப்பு புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, சோமரசன்பேட்டை, திருச்சி.
நான்காம் பரிசு ரூபாய் 3,000/- யை ர. தருண் 12ஆம் வகுப்பு புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி, சத்திரம், திருச்சி.
ஐந்தாம் பரிசு ரூபாய் 2,000/- யை 1. சே.ஸ்ரீ. வேங்கட சுப்ரமணியன் 12ஆம் வகுப்பு புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி, சத்திரம், திருச்சி..
2. வி. கார்த்திகா 12ஆம் வகுப்பு புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பொன்மலைப்பட்டி, திருச்சி ஆகியோர் பெற்றுள்ளனர்.
பள்ளிக்கான தொகுதி இரண்டில் முதல் பரிசு ரூபாய் 10,000/- ( பரிசிற்கான சதவீதம் பெறவில்லை )இரண்டாம் பரிசு ரூபாய் 7,000/- ( பரிசிற்கான சதவீதம் பெறவில்லை )
மூன்றாம் பரிசு ரூபாய் 5,000/- யை ஆ. சுந்தரேசன்,11ஆம் வகுப்பு தேசியக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி, சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி.
நான்காம் பரிசு ரூபாய் 3,000 ( பரிசிற்கான சதவீதம் பெறவில்லை )
ஐந்தாம் பரிசு ரூபாய் 2,000/- ஹ. மர்ஜானா பேகம் 7ஆம் வகுப்பு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, ஏர்போர்ட், திருச்சி ஆகியோர் பெற்றுள்ளனர்
பள்ளிக்கான தொகுதி மூன்றில் முதல் பரிசு ரூபாய் 10,000/- யை ஆ. அஸ்வினி இலட்சுமி, 12ஆம் வகுப்பு, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி.இரண்டாம் பரிசு ரூபாய் 7,000/- ( பரிசிற்கான சதவீதம் பெறவில்லை )
மூன்றாம் பரிசு ரூபாய் 5,000/- ( பரிசிற்கான சதவீதம் பெறவில்லை )
நான்காம் பரிசு ரூபாய் 3,000/- யை மு. பிரவின் 9ஆம் வகுப்பு அரசு ஆதி திராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்டூர், திருச்சி.
ஐந்தாம் பரிசு ரூபாய் 2,000/- ( பரிசிற்கான சதவீதம் பெறவில்லை )
மற்றும் பல பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப் பரிசுசாக ரூபாய் 1000/- யும் வழங்கினர் ( முதல் மூன்று பரிசுகளை அதற்கான சதவீதம் பெறவில்லை எனில் அதனையும் கூடுதலாக ஊக்கப் பரிசில் இணைக்கப்பட்டுள்ளது).
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 5 போட்டிக்களுக்கும் ஐந்து நிலைகளில் பரிசுகள் மேலும் ஒவ்வொரு போட்டியிலும் ஊக்கப்பரிசாக தலா பத்து பேருக்கு ரூபாய் 1000 என ஐந்து போட்டிகளுக்கும் சுமார் ஒன்றரை இலட்சம் அளவிற்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டிருகிறது.
மேற்கண்ட பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நாளிலேயே திருச்சி மாவட்டத்தை சார்ந்த அனைத்துக் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற
கலக்க வராங்க தமிழ்ப் பசங்க எனும் தமிழ்ப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் திருச்சி சார் 25க்கும் மேற்பட்ட கல்லூரியின் சார்பில் மாணவர்கள் பங்கேற்று தங்களது கலைத் திறனை நடனம், ஊமை நாடகம், கவிதை, பேச்சு, தனி திறன்கள், போன்மி உருவாக்கம், பாடல் என பல்வேறு உள் அரங்க மற்றும் வெளி அரங்க (onstage – offstage) நிகழ்வுகள் வழி வெளிக்காட்டினர். அவர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில் பங்கேற்கும் அனைவருக்கும் நினைவுப் பரிசும் சான்றிதழும் (trophys and certificates for all the participants) வழங்கப்பட்டது.
முதல் மூன்று இடங்களை பிடிக்கும் கல்லூரிகளான திருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரியும் சிறப்புப் படைப்புகளுக்கான சிறப்புப் பரிசும் பெற்றுள்ளன.
வெளி அரங்க போட்டிகளான பேச்சுப் போட்டியில் ஜமால் முகமது கல்லூரி மாணவர் யுவபாரதி மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர் ஷஹில் அகமத் ஆகியோர் முதலிடம் பெற்றனர். ஓவியப் போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர் ஹரிஹரசுதன் முதலிடம் பெற்றார். சுவரொட்டி தயாரிப்பில் பிஷப் ஹீபர் கல்லூரி மாணவர் மாஷா. சீ முதலிடம் பெற்றார். கட்டுரை போட்டியில் அரசு கலைக் கல்லூரியின் மாணவர் நவீன் குமார் முதலிடம் பெற்றார். போன்மீ (மீம்) யில் அரசு கலைக் கல்லூரி மாணவர் விவேக் முதலிடம் பெற்றார். கவிதை போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரியின் மாணவர் அபி முதலிடம் பெற்றார். சின்னம் வடிவமைப்பில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சதீஷ் முதலிடம் பெற்றார். குறும்பட போட்டியில் பிஷப் ஹீபர் மாணவர் ஷகில் அகமத் முதலிடம் பெற்றார். முகச் ஓவியம் வரைதல் போட்டியில் ஜமால் முகமது கல்லூரியின் மாணவர் ரஜ்னா பேகம் மற்றும் உதயா ஶ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
மேலும் திருச்சி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், தமிழ் மற்றும் சமூக தன்னார்வலர்கள் மற்றும் ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்ற னர்.நிகழ்ச்சிக்கு தமிழகப் பெண்கள் செயற்களம் திருச்சி மாவட்ட செயலாளர் தீபிகா சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். தமிழரண் மாணவர்கள் குறித்த அறிமுகவுரை திருச்சி தமிழரண் மாணவர்கள் மாவட்ட செயலாளர்கள் ப. அய்யப்பன், மு.தி.சலீம், தி. தென்றல் ஆகியோர் வழங்கினர். முன்னதாக
தமிழரண் மாணவர் கனிமொழி வரவேற்றார் மற்றும் தமிழரண் மாணவர் ரஞ்சித் நன்றியுரை வழங்கினார்.
இந் நிகழ்வின் ஊடக துணையாக (Media Partner) பிசினஸ் திருச்சி ஊடகத்தாரும், விளம்பரதாரர்களாக பூர்வீகா மொபைல்ஸ், வசந்த் & கோ, தொப்பிவாப்பா பிரியாணி, மாதவன் மென் பொருள் அங்காடி, பைரோ டெக் கெமிக்கல்ஸ், போன்ற பல நிறுவனங்களும் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.