Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அள்ளிக் குவித்த வங்கிகள்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அள்ளிக் குவித்த வங்கிகள்..!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுமே சென்ற காலாண்டை விடவும் அதிகமான லாபத்தையே ஈட்டியுள்ளன.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

பொதுத் துறை வங்கியான கனரா வங்கி மொத்தம் ரூ.1,332.61 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 2020ஆம் ஆண்டின் இதே காலத்தில் இவ்வங்கி ரூ.444.41 கோடி மட்டுமே லாபம் ஈட்டியிருந்தது. கனரா வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் 2020-21 நிதியாண்டின் ஜூலை செப்டம்பர் காலாண்டில் ரூ.20,793.92 கோடியிலிருந்து 2021–22 ஜூலை – செப்டம்பர் காலாண்டில் ரூ.21,331.49 கோடியாக அதிகரித்துள்ளது.

தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் பேங்க் 86 சதவீத வளர்ச்சியுடன் ரூ.3,133.32 கோடி லாபத்தை இந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில் ஈட்டியுள்ளது. 2020ஆம் ஆண்டின் இதே காலத்தில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,682.67 கோடியாக மட்டுமே இருந்தது. இவ்வங்கியின் வருமானத்தைப் பொறுத்தவரையில் ரூ.19,550 கோடியிலிருந்து ரூ.20,134.39 கோடியாக உயர்ந்துள்ளது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

சென்ட்ரல் வங்கியின் நிகர லாபம் 55.28 சதவீத உயர்வுடன் ரூ.250 கோடி கிடைத்துள்ளது. அதேபோல, இண்டஸ்இந்த் வங்கிக்கு ரூ.1,147 கோடியும், ஃபெடரல் வங்கிக்கு ரூ.485.72 கோடியும் லாபம் கிடைத்துள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.