வீட்டிலிருந்தே வருமானம் ஈட்ட பெண்களுக்கான அழகு தொழில்
வீட்டிலிருந்தே வருமானம் ஈட்ட பெண்களுக்கான அழகு தொழில்
நாகரீக உலகில் விலைமதிப்பான தங்கநகையை விட, குறைந்த விலையில் அழகாக தோன்றும் கிறிஸ்டல் நகைகளை பெண்கள் பெரிதும் விரும்பி அணிகின்றனர். இத்தகைய நகைகளை பெண்கள் வீட்டில் இருந்தபடியே தயாரித்து அதிக வருமானம் பெறலாம்.
இத்தொழிலை மேற்கொள்ள குறைந்த படிப்பறிவே போதுமானது. எளிதில் கற்றுக்கொள்ளலாம். ஒரு நபர் ஒரே நாளில் 30 முதல் 50 நகைகளை தயாரிக்கலாம். கூட்டாக சேர்ந்து தயாரித்தால் அதிக லாபமும் பெறலாம். இத்தொழிலை மேற்கொள்ள ஊக்கு, காய்ந்து ஊக்கு ஸ்கருசெட், கியர்லாக், கட்டர், பிளேயர் ஆகியவை தேவையானது. இவை பேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும். இவ்வகை நகைகள் தங்கம், வெள்ளி நகை போன்று உருக்கி தயாரிப்பது இல்லை.
எளிதாக பலவண்ண கிறிஸ்டல், சக்கரியா, பால் ஆகியவற்றை கோர்ப்பது தான். சில சுயதொழில் பயிற்சி நிறுவனங்களும் விதவிதமான கிறிஸ்டல் நகைகளை செய்ய பயிற்சி தருகின்றன.