Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வணிக நிறுவனத்திற்கான சிறந்த தகுதிகள்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

வணிக நிறுவனத்திற்கான சிறந்த தகுதிகள்

கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் விலை, தரம், இருப்பு அளவு ,அதை கையாள்வதற்கான செலவு ,சேமித்து வைப்பதில் ஏற்படக்கூடிய எடை குறைவு, தரக்குறைவு ,அதை சிப்பமிட சுத்தம் செய்ய, வங்கி வட்டி , இதர செலவுகள்,விற்பனையில் ஏற்படும் இடர்கள் போன்ற அனைத்து செலவுகளையும் துல்லியமாக கணக்கிட்டு; சந்தை நிலவரம், விற்பனை வாய்ப்பு,வாடிக்கையாளர் மனநிலை போன்றவற்றை கணக்கில் கொண்டு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் .

உங்களுக்கு 5% லாபம் வேண்டும் என்று எதிர்பார்த்தால்; நீங்கள், அசல் விலையிலிருந்து 5.27 சதவீதம் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.10% வேண்டும் எதிர்பார்த்தால் 11.12 % அசல் விலையிலிருந்து அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உங்களின் எதிர்பார்ப்பின்படி லாபம் கிடைக்கும். கொள்முதல் செய்த வணிக நிறுவனத்தின் கணக்குகளை முறையாகவும் தெளிவாகவும் பராமரிக்க வேண்டும் .

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

உங்கள் நிறுவனத்தில் இருப்பில் உள்ள பொருள்களுக்கு தொடர்பில் உள்ள, துணைப் பொருட்களை வியாபாரம் செய்யும் நிறுவனங்கள்,

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

அந்த பொருட்களின் தன்மை ,தரம் அதனுடைய விலைகள்; விற்பனையாளரின் நம்பகத்தன்மை, போன்றவற்றை தெரிந்து கொண்டு, வாடிக்கையாளர்கள் விரும்பும் போது வெளிப்படைத் தன்மையுடன் தந்து உதவிட வேண்டும் .

மொத்தமாக கொள்முதல் செய்யும்போது,சிப்பமிட்டு வந்த அட்டைப் பெட்டிகள், சாக்குகள்,பாலிதீன் கவர்கள்,போன்றவை உபரி லாபமாக கிடைப்பதால்,அதையும் சரியாக பராமரிக்க வேண்டும் .

இவை தவிர ,கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களை தரம் பிரித்தல் (Grading) சுத்தம் செய்தல் (Cleaning), வரிந்து கட்டுதல் (Packaging), காட்சிப் படுத்துதல் ((Eye level visualization), இருப்பு வைத்தல் (Placement / Availability), நம்பகத் தன்மை ஏற்படுத்துதல், சரியான நேரத்திற்கு வாடிக்கையாளருக்கு கொண்டு சேர்த்தல், துணைப் பொருள்கள் கிடைக்க உதவுதல் போன்ற செயல்கள் நல்ல வணிக நிறுவனத்திற்கான கூடுதல் தகுதிகள் கையாளும் செலவுகளை குறைத்தல் வணிக நிறுவனத்துக்கு வேண்டிய அவசியமான தகுதியாகும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.