வங்கியில் FD வைத்திருப்போர் கவனிக்க!
வங்கியில் FD வைத்திருப்போர் கவனிக்க!
பொதுவாக வங்கியில் வாடிக்கையாளரின் நிரந்தர வைப்புத் தொகை கணக்கிற்கான அவகாசம் முடியும் நிலையில் தானாகவே வங்கிகளில் அவை புதுப்பித்துக் கொள்ளப்படும். தற்போது இந்த நடைமுறையை மாற்றி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி நிரந்தர வைப்புத் தொகை கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அதன் அவகாசம் முடியும் தருவாயில் வங்கிகளுக்கு சென்று புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக தனியான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். புதுப்பிக்கத் தவறினால் சேமிப்பு கணக்கிற்கு வழங்கும் 2.9 சதவீத வட்டி மட்டுமே வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.