சொத்துப் பத்திரங்கள் ஜாக்கிரதை..!
சொத்தின் மீதான எந்த ஆவணங்களையும், குடும்ப உறுப்பினர்கள் அல்லாத மற்றவர்களிடம் கொடுப்பது கூடாது. குடும்ப உறுப்பினர்களிடம்கூட அவசியம் எனில் மட்டுமே வழங்க வேண்டும். சொத்துப் பத்திரத்தை வங்கி லாக்கரிலோ, உங்களுக்கென்று இருக்கும் பாதுகாப்பான இடத்திலோ வைத்திருப்பதுதான் நல்லது.
இன்றைய நிலையில், ஒரிஜினல் பத்திரங்களைப் அடமானமாக வைத்து வட்டிக்குக் கடன் வாங்குபவர்கள் அதிகம். இதுவும் பிரச்னைக்குரிய விஷயம்தான். ஒருவேளை, அந்த சொத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில், ஏமாற்று வேலைகள் அதிகம் நடக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் சொத்து பத்திரத்தின் நகலைக்கூட இன்னொருவரிடம் கொடுக்காமல் இருப்பது நல்லது” என்றார் தெளிவாக.