வருவாய் அள்ளித்தரும் பொக்கே
நாட்டில் பொக்கே தயாரிக்கும் தொழில் பிரபலமடைந்து வருகிறது . புதிதாக தொழில் செய்ய விரும்புபவர்கள் இத்தொழிலை தேர்ந் தெடுக்கலாம் . பொக்கேக்களில் மிக்சர் பிளவர் பொக்கே , நோன் பொக்கே உள்ளிட்ட பல வகைகள் உள்ளன .
பொக்கேக்கள் மட்டுமல்லாமல் முழு மையான ஃபுளோரிஸ்ட் ஷாப் வைத்து செயல் படும்போது அதிகலாபமும் , தொடர்ச்சியான தொழில் வாய்ப்பும் கிடைக்கும் . விழாக்கள் , மணமேடைகள் , அலுவலக நிகழ்ச்சிகள் , பல்வேறு சுபநிகழ்ச்சிகள் , பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மலர் அலங்காரங்கள் செய்யப்படும் போக்கு அதிகரித்துள்ளது . பொக்கே அலங் காரமும் பெருகியுள்ளது . இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்துவோரிடம் சென்று ஆர்டர்கள் பிடித்து வருமானம் பார்க்கலாம் .
மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தேர்ந்தெடுத்து இது போன்ற விற்பனை மையத்தை அமைக்கலாம் . பேருந்து நிலையம் , வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து வணி கம் செய்தால் விற்பனை அதிகரிக்கும் . புளோரிஸ்ட் தொழிலானது ஒரு கலை என்பதால் இத்தொழிலில் ஈடுபட ஆர்வம் , கலைத்திறன் , வித்தியாசமான கற்பனைத்திறன் போன்றவை தேவை .
விற்பனை அதிகரிக்கவும் , வருவாய் அதிகரிக்கவும் தனித்தன்மை மிக்க தயாரிப்பாக இருக்க வேண்டும் . புளோ ரிஸ்ட் தொழிலுக்கு அடிப்படைத் தேவையான பூக்களை அந்தந்த பகுதி சிறு மற்றும் மொத்த வியாபாரிகளிடமும் , மலர்ச் சந்தைகளிலும் தேவைக்கேற்ப தருவித்துக் கொள்ளலாம் . ஆரம்பத்தில் குறைந்தளவு பூக்கள் கொள்முதல் செய்து தயாரிக்க முயற்சிக்கலாம் . படிப்படியாக விற்பனை அதிகரிக்கும் போது மொத்த விலைக்கு கொள்முதல் செய்யலாம் . அப்போது கொள்முதல் விலை யும் குறையும் . புளோரிஸ்ட் தொழிலுக்கு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன . பயிற்சி பற்றிய விளம்பரங்கள் வெளிவரும்போது அங்கு சென்று விவரம் பெறலாம் .
புளோரிஸ்ட் கடைகளில் உதவியாளர் பணியில் சேர்ந்தும் அத்தொழிலைக் கற் கலாம் . இதனால் நேரடிப் பயிற்சி கிடைப்பதுடன் , ஓரளவு வருவாயும் கிடைக்கும் . போதிய அனுபவம் பெற்ற பின்னர் குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்தோ , அல்லது வீட்டிலிருந்தபடியோ இத்தொழிலை மேற்கொள்ள முயற்சிக்கலாம் . இத்தொழிலை மேற்கொள்வோர்களில் பலர் நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது