Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியை கலக்கும் பட்ஜெட் கல்யாணம்… JAS WEDDING PLANNER!

‘ஜாஸ் வெட்டிங் பிளானர்’நிறுவனர்கள் சிறப்புப் பேட்டி..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சியை கலக்கும் பட்ஜெட் கல்யாணம்… 

‘ஜாஸ் வெட்டிங் பிளானர்’நிறுவனர்கள் சிறப்புப் பேட்டி..!

தமிழ் சமூகத்தில், ‘திருமண நிகழ்வு’ என்பது, உலகளவில் பிரசித்திப் பெற்ற ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. “கல்யாணம் பண்ணிப்பார்.. வீட்டைக் கட்டிப்பார்” என்று கூறுவர். அந்த அளவிற்கு இரண்டு நிகழ்வுகளும் பெரும் சிரத்தையுடன், சிரமத்துடன் செய்து முடிக்கக் வேண்டிய ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது.

பெண் பார்த்து முடிவானவுடன், தேதி நிர்ணயித்து, மண்டபம் பார்த்து, பத்திரிக்கை டிசைனிங் தொடங்கி, டெக்கரேஷன், சாப்பாடு, அதற்கான உணவு தயாரிப்பாளர்களை (கேட்டரிங் சர்வீஸ்) முடிவு செய்வது, மேளம், புரோகிதர், வீடியோ, போட்டோ, ப்யூட்டிசியன், ஆடை வடிவமைப்பு, மளிகை, காய்கறி, வாகன வசதி என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதற்குள், ‘அப்பாடா’ என்று அசர வைத்துவிடுகிறது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

அன்றைய திருமணங்கள் மூன்று நாட்களுக்கு விழாக்கோலமாக நடைபெற்று வந்தது. ஆனால் இன்று திருமணங்கள் ஒரு நாளைக்குள் சுருங்கிவிட்டது. அப்படியான ஒரு நாள் நிகழ்வும் இன்றைய வேக உலகில் திருமண ஏற்பாடுகள் என்பது பெரும் அலைச்சலான நிகழ்வாக கருதப்படுகிறது.

உங்களுக்கு ஏன் இந்த அலைச்சல் ‘கல்யாணம் உங்களுது.. பிளானிங் எங்களுது’, என்ற தாரக மந்திரத்துடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு அடியெடுத்து வைத்து இன்று திருச்சியை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள், ‘ஜாஸ் வெட்டிங் பிளானர்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் A.வில்ஸ்டன் ஜேம்ஸ், J.ஜெஸ்டின் ஜெகோஸ்ஆகியோர்.

‘ஜாஸ் வெட்டிங் பிளானர்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் A.வில்ஸ்டன் ஜேம்ஸ், J.ஜெஸ்டின் ஜெகோஸ்
‘ஜாஸ் வெட்டிங் பிளானர்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் A.வில்ஸ்டன் ஜேம்ஸ், J.ஜெஸ்டின் ஜெகோஸ்

A. வில்ஸ்டன் ஜேம்ஸ் பிஇ மெக்கானிக்கல் படித்து விட்டு கத்தாரில் ஈவென்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். அதேபோல் J.ஜெஸ்டின் ஜெகோஸ் பிஎஸ்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு மும்பை தாஜ்கோரமண்டலில் பணியாற்றியுள்ளார். சிறுவயது நண்பர்களான இருவரும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ‘ஜாஸ் வெட்டிங் பிளானர்’ என்ற நிறுவனத்தை தொடங்கி திருமணத்திற்கு தேவையான உணவு மற்றும் பரிமாறுவதற்கான ஆட்களை வழங்கி வந்துள்ளனர்.

வீடியோ லிங்:

 

ஆரம்பத்தில் பகுதிநேர வேலையாக மட்டுமே செய்த இவர்கள், அனுபவம் மற்றும் திறமையை நம்பி முழுநேரத் தொழிலாக கையிலெடுத்துக் கொண்டனர்.
தற்போது, கல்யாணத்திற்கு தேவையான முகூர்த்தக்கால் நடுவது முதல் தாம்பூலப்பை வரை A to Z என அனைத்தையும் செய்து கொடுக்கக் கூடிய நிறுவனமாக விளங்குகிறது ‘ஜாஸ் வெட்டிங் பிளானர்’. ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘ஜாஸ் வெட்டிங் பிளானர்’ நிறுவனர்களான வின்சன்ட் ஜேம்ஸ், ஜெஸ்டிலின் ஜோஸ் ஆகியோருடன் உரையாடினோம்.

 ஜாஸ் வெட்டிங் பிளானருக்கான தொடக்கம் எங்கிருந்து எழுந்தது?
எங்கள் வீட்டு திருமண நிகழ்வில் இருந்தே தொடங்கியது. எங்கள் சகோதரியின் திருமணத்தின் போது அனைத்து வேலைகளையும் நாங்களே செய்தோம். அந்த சமயத்தில் பல விரயச் செலவுகளை தவிர்க்க முடியாமல் தெரிந்தே செய்தோம். பிறகு தான், இந்த விரயச் செலவுகள், அனைத்து திருமண நிகழ்வுகளிலும் நடக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது என்பது புரிந்தது. இதையடுத்தே, திருமண நிகழ்வுகளுக்கான ஏற்பாடு அனைத்தையும் சிரம் மேற்கொண்டு, திருமண வீட்டார்களின் விரயச் செலவுகளை தவிர்க்க ‘ஜாஸ் வெட்டிங் பிளானர்’ என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறோம்.

திருமண நிகழ்வில் சமையலில் இருந்து எங்களுடைய சேவையை தொடங்கினோம். சமையல் செய்வதற்கென்று தனியாக குடோன் வைத்துள்ளோம். அங்கு 5000 பேருக்கான உணவினை சமைக்க முடியும். அதைத் தொடர்ந்து, எங்கள் அனுபவங்களை கொண்டு, அடுத்தடுத்த படிக்கட்டுகளில் ஏறி, தற்போது கல்யாணத்தில் முகூர்த்தக்கால் தொடங்கி புரோகிதர், நாதஸ்வரம், போட்டோகிரபி, விடியோகிரபி மற்றும் தாம்பூலப் பை வரை அனைத்து வேலைகளையும் நாங்களே செய்து கொடுக்கிறோம்.

2020ம் ஆண்டு பெங்களுரில் உள்ள ‘குளோபல் பவுண்டேசன்’ என்ற நிறுவனத்தின் சார்பில் ‘பிசினஸ் எக்ஸலன்ஸ் கான்க்லேவ் 2021’ என்ற நிகழ்ச்சியில், ‘YOUNG ACHEIVER OF THE YEAR’ என்ற விருது வழங்கியது. 2021ம் ஆண்டு யுனிவர்செல் பிரஸ் மீடியா வித்தியா பாத் சார்பில் ‘பிளிழிளிஹிஸிகிஙிலிணி ஞிளிசிஜிளிஸி’ பட்டம் எங்களுக்கு வழங்கினார்கள். இவ்விருதுகள் அனைத்தும் எங்களுக்கு பெருமையும், வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்க வேண்டும் என்ற உந்துதலையும் வழங்குகிறது.

 சமையல் பணிகளை மட்டுமே செய்து கொடுத்து வந்த உங்கள் நிறுவனம் A to Z என அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் சென்ற சூழல் என்ன?
திருச்சியில், எஸ்.ஏ.எஸ். அப்பார்ட்மென்டில் முதன்முதலில் BIRTHDAY EVENT கிடைத்தது. சின்ன அளவிலான பட்ஜெட் தான், ஆனால், நாங்கள் பட்ஜெட்டை பற்றி யோசிக்கவில்லை. சிறியதோ, பெரியதோ சிறப்பாக செய்து தரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதை செய்து முடித்தோம். அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மூலம் எங்களுக்கு 7 லட்சத்திற்கான திருமண ஆர்டர் கிடைத்தது. அந்த திருமண நிகழ்வே, எங்கள் தொழிலில் திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல், பர்த்டே ஈவண்டுக்கான ஆர்டர் கொடுத்தவர்களும் அவர்களின் வீட்டில் எந்த விசேஷ நிகழ்வு நடந்தாலும் எங்களிடமே பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அந்த அளவிற்கு ஒவ்வொரு ஈவண்ட்டையும் சிறப்பாக செய்து கொடுக்கிறோம்.

இந்த தொழிலில் உள்ள போட்டிகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?
ஆரம்பத்தில் தொழில்போட்டிகள் இருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் அது உண்மை இல்லை என்று போகப் போக புரிந்து கொண்டோம். ஒரு முழு வெட்டிங் பிளானர் ஆக நாங்கள் தொடங்காமல், கல்யாணத்திற்கான தனித்தனி சேவைகளை செய்யும் நிறுவனமாகவே தொடங்கினோம். அதாவது, சமையல் கேட்டால் சமையல் செய்து கொடுப்பது, வேலைக்கு ஆட்களை அனுப்பி கொடுப்பது, டெக்கரேசன் செய்து கொடுப்பது என்று தனித்தனியாகவே செய்து கொடுத்தோம். ஆனால், முழு பேக்கேஜ் முறையில் திருமணம் செய்து கொடுக்கும்போதே தொழில்போட்டி தெரியவந்தது. இதைத் தொழிலாக பார்க்காமல் சேவையாக செய்து வருவது தான் மற்ற நிறுவனங்களிடம் இருந்து எங்களை தனித்துக் காட்டுகிறது.

வீடியோ லிங்:

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

லாக்டவுன் நெருக்கடிகளை எப்படி எதிர்கொண்டீர்கள்?
கொரோனா லாக்டவுன் எந்த தொழிலையும் விட்டுவைக்கவில்லை, குறிப்பாக எங்களுடைய தொழில் முழுமையாக முடங்கிப்போனது. அந்த நேரத்தில் “பாரம்பரிய முறைப்படி, உங்கள் வீட்டில் உங்கள் திருமணம்” என்ற புதிய கான்செப்டை நடைமுறைப்படுத்தினோம். அதன்படி, 1 லட்சத்தில் திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தோம். இந்த கான்செப்ட் நாங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் பெரிய அளவில் சென்றடைந்தது. எந்த அளவிற்கு என்றால், லாக்டவுனில் தளர்வுகள் வந்த பிறகும் கூட இந்த பேக்கேஜில் திருமணம் செய்து தரச்சொல்லி ஆர்டர் வருகின்றன. நாங்கள் தற்போது நடத்திக் கொடுக்கக்கூடிய அனைத்து திருமணங்களும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டே நடத்துகிறோம். எங்கள் சார்பில் பணிக்கு வருபவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அதேபோல், திருமணத்திற்கு வருபவர்களுக்கு மாஸ்க், சானிடைசர் உள்ளிட்டவை இந்த பேக்கேஜில் நாங்களே தருகிறோம்.

இயல்பு நிலை திரும்பி கொண்டிருக்கும் நிலையில் ஜாஸ் வெட்டிங் பிளானரில் சிறப்பு கான்செப்டுகள் எதுவும்அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதா?
1 லட்சம் பேக்கேஜிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. லாக்டவுன் தளர்வுகளுக்குப் பின் கொஞ்சம் பெரிய பட்ஜெட் திருமணத்திற்கு ஆர்டர் வருகின்றன. நாங்கள் தனிப்பட்ட திருமண பேக்கேஜ் வைத்திருக்கிறோம். அதில், வாடிக்கையாளர்கள் கேட்கும் சேவைக்கு ஏற்ப தொகை வரும். அந்த வகையில், 17 லட்சம் வரையில் திருமண நிகழ்வினை நடத்தி முடித்துள்ளோம்.

வாடிக்கையாளர்கள் இந்த தொகைக்குள் திருமணத்தை முடிக்கவேண்டும் என்று விருப்பப்படுகின்றனர். இதையடுத்தே நவம்பர் 1 முதல் “1 லட்சம் முதல் 11 லட்சம் வரை.. ‘’உங்கள் பட்ஜெட்டில், உங்கள் திருமணம்’’ என்ற கான்சப்டை அறிமுகப்படுத்த உள்ளோம். அதன்படி, வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்ஜெட்டில் திருமணத்தை சிறப்பாக நடத்திக் கொடுக்க முடியும். ஏன்? நவம்பர் 1 என கேட்கிறீர்களா?, அன்று தான் நம்முடைய, ‘ஜாஸ் வெட்டிங் பிளானர்’ நிறுவனம் தொடங்கப்பட்ட நாள். அன்றுடன் எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நம் நிறுவனம்.

 2018ம் ஆண்டு 3 லட்சம் பேக்கேஜில் 32 திருமண நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்து முடித்தோம். அதற்காக அன்றைய மாநில அமைச்சர் மா.பா.பாண்டியராஜனின் கைகளால், ‘தொழில் நட்சத்திர விருது‘ பெற்றோம். தமிழகம் முழுவதும் பல நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் எங்களுடைய சிறந்த சேவைக்காக இவ்விருது வழங்கப்பட்டது.
2018ம் ஆண்டு 3 லட்சம் பேக்கேஜில் 32 திருமண நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்து முடித்தோம். அதற்காக அன்றைய மாநில அமைச்சர் மா.பா.பாண்டியராஜனின் கைகளால், ‘தொழில் நட்சத்திர விருது‘ பெற்றோம். தமிழகம் முழுவதும் பல நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் எங்களுடைய சிறந்த சேவைக்காக இவ்விருது வழங்கப்பட்டது.

‘ஜாஸ் வெட்டிங் பிளானர்’ நிறுவனத்தின் மூலம் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுக்கறீர்கள்?

ஆரம்பத்தில் நாங்கள் கூறியது போல திருமண நிகழ்விற்கான தனித்தனித் சேவைகள் மட்டுமே செய்து கொடுத்தோம். தொடர்ந்து, திருமண நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கினோம்.

தற்போது, THEME BASED BIRTHDAY PARTIES, CORPORATE EVENT, DJ PARTIES, RETIREMENT FUNCTION, தனியார் மருத்துவமனை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஆட்களை வழங்குவது என அனைத்து சேவைகளையும் செய்து வருகிறோம். திருச்சி விமானநிலைய விரிவாக்க நிகழ்ச்சியை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேரலையில் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சிகளை நாங்களே செய்து கொடுத்தோம்.

உங்கள் நிறுவனத்திற்கான மார்க்கெட்டிங் யுத்திகள் என்ன?
டிஜிட்டல் மார்க்கெட்டிங் வளர்ந்துள்ள தற்போதைய சூழ்நிலை யில், எங்கள் நிறுவனத்திற்கு என்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கம் என சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்களின் கருத்துகளை பெற்று பதிவிட்டு வருகிறோம். எவ்வளவு தான் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வந்தாலும், எங்கள் தொழிலைப் பொறுத்தவரையில் வாடிக்கையாளர்கள் நேரடியாக எங்கள் சேவையைப் பார்த்தால் மட்டுமே எங்களுக்கு ஆர்டர் கொடுப்பார்கள். அதனால், எங்களிடம் ஆர்டர் கொடுக்க வருபவர்களுக்கு நாங்கள் நடத்தவிருக்கும், ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து எங்கள் சேவையை பார்க்கச் சொல்வோம். வாடிக்கையாளர்களின் நம்பிக்கை யும், மனநிறைவும் எங்களின் இரு கண்களாக கொண்டுள்ளோம்.

வீடியோ லிங்:

மேலும், நாங்கள் இருவரும் சிறுவயது முதலே நண்பர்கள். அதனால், எங்கள் வீட்டிற்கும் நன்கு பரிச்சயம் உண்டு. எங்கள் இருவரின் குடும்பமே உறவுகள் போன்றே பழகுகின்றனர். எப்போதும் அவர்களின் சப்போர்ட் எங்களுக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. எந்த ஒரு புது கான்செப்ட் கொண்டு வந்தாலும் அவர்களுடைய கருத்துகளையும் கேட்ட பிறகே முடிவுகளை எடுப்போம். எங்களுடைய நட்பிற்கு அதுவும் ஒரு அடித்தளமாக உள்ளது.

‘குறைந்த விலையில் நிறைந்த சேவை’ என்ற வாசகம் தற்போதைய கால சூழ்நிலையில் ஒத்துவராது. அது நம்முடைய நிறுவனத்தை அடகு வைப்பதற்கு சமம். அதனால் தான் நாங்கள் ‘’சரியான விலையில். சிறந்த சேவை’’ என்ற பாதையை தேர்வு செய்து பயணிக்கிறோம். எங்களின் பட்ஜெட்டில் வாடிக்கையாளர்களை திணிக்காமல் அவர்கள் சொல்லும் பட்ஜெட்டில் சிறந்த திருமண நிகழ்வை செய்து கொடுக்கிறோம். அதேபோல், பேக்கேஜ் முறையில் தான் செய்து கொடுப்போம் என்று கிடையாது. நிகழ்ச்சிகளுக்குத் தேவையான தனித்தனிச் சேவைகளையும் தற்போது வரை செய்து கொடுக்கிறோம்.

ஜாஸ் வெட்டிங் பிளானருக்கு கிளைகள் உள்ளதா?
திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் எங்களது தலைமையகம். சென்னையில் கிளை. ஆனால் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பிறநிகழ்ச்சிகள் என இதுவரை 500க்கும் மேல் நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்துள்ளோம்.

தமிழகம் முழுவதும் நிகழ்ச்சிகளை சிறப்பான முறையில் செய்து கொடுக்க தயாராக உள்ளோம். நாங்கள் எவ்வளவு விருதுகள் வாங்கினாலும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் வாடிக்கையாளர்கள் கூறும் எங்களைப் பற்றிய நன்மதிப்புகளையே பெரும் பாக்கியமாகவும் விருதாகவும் கருதுகிறோம். அதற்காக தொடர்ந்து பயணிப்போம். அந்த வகையில் எங்களுக்கு ஆதரவு வழங்கி வரும் வாடிக்கையாளர்களுக்கு பிசினஸ் திருச்சி இதழ் வழியாகவும நாங்கள் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

வீடியோ லிங்:

நவம்பர் 1 என்ன சார் விசேஷம்?
“1 லட்சம் முதல் 11 லட்சம் வரை.. ‘’உங்கள் பட்ஜெட்டில், உங்கள் திருமணம்’’ என்ற கான்சப்டை அறிமுகப்படுத்த உள்ளோம். அதன்படி, வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்ஜெட்டில் திருமணத்தை சிறப்பாக நடத்திக் கொடுக்க முடியும். 2018ம் ஆண்டு 3 லட்சம் பேக்கேஜில் 32 திருமண நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்து முடித்தோம்.

எங்களின் பட்ஜெட்டில் வாடிக்கையாளர்களை திணிக்காமல் அவர்கள் சொல்லும் பட்ஜெட்டில் சிறந்த திருமண நிகழ்வை செய்து கொடுக்கிறோம்.

உங்கள் இல்ல விசேஷங்களை
விரயமின்றி, அலைச்சலின்றி மிகச் சிறப்பான முறையில் செய்ய வேண்டுமா..?
ஜாஸ் வெட்டிங் ப்ளானரை
தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு:
தீன் காம்பளக்ஸ், பொன்மலை சர்வீஸ் ரோடு, டிவிஎஸ் டோல்கேட், திருச்சி 21.
A.வில்ஸ்டன் ஜேம்ஸ் : 81440 10401
J.ஜெஸ்டின் ஜெகோஸ் : 97883 73341.
Web : www.jasweddingplanner.com,
Fb : https://www.facebook.com/jasweddingplanner
Youtube : JAS Wedding Planner

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.