பிசினஸ் திருச்சி வாசகர் விமர்சனங்கள்….
என்ன செய்யலாம், எப்படி செய்யலாம், என்ற கேள்விக்குறியோடு பயம் கலந்த சந்தேகப் பயணம் செய்து கொண்டிருக்கும் இன்றைய இளைய சமுதாய தொழில் முனைவு சிந்தனை உள்ளவர்களுக்கு தங்கள் இதழ் செய்திகள் ஒரு வரப்பிரசாதமாகும். 21 வயதில் குச்சி ஐஸ் விற்கத் துவங்கியவர் தற்போது மிகப்பெரிய விற்பனை சாம்ராஜ்யத்தையே உலக அளவில் உருவாக்கியிருக்கிறார் என்ற தொகுப்பு செய்தி அனைவருக்கும் தன்னம்பிக்கையை உருவாக்குவதாக அமைந்திருக்கிறது. பிசினஸ் திருச்சி இதழுக்கு வாழ்த்துக்கள்.
இரா.சண்முகம், அரியமங்கலம்.
தள்ளுவண்டியிலிருந்து ஒரு ஐஸ்க்ரீம் சாம்ராஜ்யம் – ஒரு பக்க கட்டுரையை குறைவான வார்த்தைகளில் மிகச் சிறப்பாக அமைத்துள்ளது சிறப்பு. அருமையான கட்டுரை.
பிரகாஸ், பாலக்கரை, திருச்சி.
தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகளையும், முதல்வர் முன்னிருக்கும் சவால்களையும் அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கின்றது, “முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு.
அ.எபினேசர், சங்கிலியாண்டபுரம்
பிஏசிஎல் – பயனுள்ள கட்டுரை; துணுக்குச் செய்திகள் – ஏராளம்; சிறப்புக் கட்டுரைகள் – அருமை; வணிகம் பழகு – தொழில் பழகலாம்; வீட்டு மனை வாங்கப் போறீங்களா – வழிகாட்டி; வேலைவாய்ப்புச் செய்திகள் – நல்ல தகவல் என இப்படி ஸ்டாலினோடு தொடங்கி வங்கி விடுமுறை வரை ஆகஸ்ட் மாத இதழில் வெளியான அனைத்தும் அருமை.!
எம்.சலீம் மண்ணச்சநல்லூர்.
ஒவ்வொரு வாரமும் வெளியாகும் சாதனை படைத்த தொழிலதிபர்களின் கட்டுரைகள் புதிய தொழில் முனைவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளன.
கே.ஹரிஷ், துறையூர்.
புதுப்புது வேலைவாய்ப்புகள் பற்றியும் மொபைல் மூலம் வீட்டிலிருந்தபடியே வருமான வரித் தாக்கல் செய்வது, ஆதார் சேவைகளை சுயமாக நாமே செய்து கொள்வது போன்ற அத்தியாவசிய தகவல்களை சாமானியர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக கொடுத்திருக்கிறீர்கள்.
-என்.பிரபாகர், குளித்தலை