கூடுதல் வட்டி தரும் பிபிஎஃப் திட்டம்..!
‘பொது வருங்கால வைப்பு நிதி’ என்று கூறப்படும் பிபிஎஃப் திட்டம் என்பது இதர சிறு சேமிப்புத் திட்டங்களைவிட கூடுதலாக வட்டி தரும் சிறந்த சேமிப்பு திட்டமாகும். தபால் நிலையங்களிலோ அல்லது எஸ்.பி.ஐ. வங்கியிலோ நீங்கள் பிபிஎஃப் கணக்கை தொடங்கலாம்.
நீண்ட கால முதலீடமாக பிபிஎஃப் கணக்கு தொடங்கினால் அது உங்களுக்கு நிச்சயமான பலனை தரும். ஏற்கனவே நீங்கள் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் என்றால் ஆன்லைனிலேயே நீங்கள் பிபிஎஃப் கணக்கை தொடங்க உதவுகிறது எஸ்பிஐ. onlinesbi.com என்ற எஸ்.பி.ஐ. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று நீங்கள் உங்களுக்கான பிபிஎஃப் கணக்கை தொடங்கலாம். மற்ற சிறுசேமிப்பு திட்டங்களை விட பிபிஎஃப் திட்டம் அதிக வட்டி தரும் திட்டமாகும். இத்திட்டத்தில் 7.1 சதவீதம் வரை வட்டி வருவாய் உள்ளது.